Vijay: விஜய்க்காக வரிந்து கட்டிக்கொண்டு நடிகர் அனல் கக்கும் பேச்சு… என்ன சொல்றாருன்னு பாருங்க…!

vijay
விஜய் தற்போது தனது கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன்ல நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஜனவரிக்குத் தள்ளிப் போய் உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்திற்கு திட்டம் தீட்ட உள்ளார்.
இப்போதே அரசியலில் உள்ள பல கட்சித்தலைவர்களையும் அசர வைக்கும் வகையில் மேடைகளில் அனல் பறக்க பேசி வருகிறார். அவருக்கு இன்னும் பிரஸ்மீட் ஒன்றுதான் பாக்கியாக உள்ளது. இதனால்தானோ என்னவோ சமூகவலைதளங்களில் அவருக்கு ஏகபோக கமெண்ட்டுகளும் வந்தவண்ணம் உள்ளன.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா வகைதான். என்றாலும் விஜய் சொல்வதைப் பல கட்சியினரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். என்னன்னா அடுத்த ஆண்டு திமுகவுக்கும், தவெகவுக்கும் மட்டும் தான் போட்டி என்று சொல்லி இருந்தார் விஜய். இதுவும் ட்ரோல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் இப்போது நடிகர் ஷாம் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அதைப் பார்க்கும்போது விஜய்க்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டாரே எனத் தோன்றுகிறது. என்ன சொல்றாருன்னு பாருங்க.
வாரிசு படத்துக்குப் பிறகு லியோ, கோட் செட்டுக்கு நான் போயிருக்கேன். ஏன்;னு தெரியல. அவரைப் பார்த்தாலே போதும். நமக்கு பெரிய எனர்ஜி வரும். எனக்கு அவர் சூரியன் போல. ஒரு எனர்ஜின்னு சொல்வேன். அவரைத் தொட்டுவிட்டு வந்தால் போதுரும். ரெண்டு மூணு மாசத்துக்கு நான் ஃபுல் எனர்ஜியோடு இருப்பேன். அவரை எப்படி எல்லாம் அசிங்கப்படுத்தினாங்க.
அதற்குப் பிறகு அவர் அடைந்த இடம் எல்லாம் சும்மா ஜோக் கிடையாது. இப்ப கூட அவரைப் பற்றி சில பேர் யூடியூப்ல பேசிட்டு இருக்காங்க. உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு? அவரைப் பத்திப் பேச என்று தான் நான் நினைப்பேன். நீ என்ன பண்ணி இருக்க? அவரைப் போல ஒருவரை எப்படி உன்னால் பேச முடியுதுன்னு நடிகர் ஷாம் அனல் பறக்க பேசியுள்ளார்.
ஷாம் தற்போது 6 கேண்டில்ஸ் என்ற படத்தில் பிச்சைக்காரனாக மேக்கப் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துல அவருக்கு 6 கெட்டப்பாம். 14 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளாராம். கிளைமாக்ஸ் காட்சியில கண் வீக்கமா இருக்கணும்னு பல நாளா தூங்காம இருந்தாராம். கருப்பா இருக்கணும்கறதுக்காக வெயில்லயே படுத்துக் கிடந்தாராம்.