21 வருடம் கழித்து விஜயுடன் மீண்டும் ‘அந்த’ நடிகர்.! என்றும் மாறாத நம்ம தளபதி.!

Published on: April 23, 2022
vijay_main_cine
---Advertisement---

தளபதி விஜய் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு பிரம்மாண்ட செட் அமைத்து முதல் கட்டமாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இப்படம் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக் இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

 

ரஷ்மிகா மந்தன ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர் சரத்குமார், நடிகர் மோகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது கூடுதல் தகவலாக நடிகர் ஷாம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – நயன்தாரா காதலரின் குசும்பை பாத்தீங்களா.?! எப்படியெல்லாம் விளம்பரம் தேடுறாங்க..,

இதற்கு முன்னால் குஷி திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருப்பர். ஆனால், அதில் ஷியாம் அட்மாஸ்பியர் நடிகர் என அழைக்கப்படும் கூட்டத்தில் விஜய் அருகில் நிற்கும் ஒரு நபராக இருந்திருப்பார் ஷாம். தற்போது விஜய்யுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் விஜய் நடித்த குருவி திரைப்படத்தில் விமல், விதார்த் என பல இளம் நடிகர்கள் அந்த திரைப்படத்தில் ஜூனியர் நடிகர்களாக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment