இதுக்கு முன்னாடி வந்து என்ன செஞ்சாங்க? விஜய் அரசியலில் இருக்கும் பவரே வேற.. பொங்கிய ஷியாம்

by Rohini |
shyam
X

shyam

Vijay Shyam: விஜயின் அரசியல் பயணம் குறித்து இன்றுவரை பல நடிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு முன்பாக எத்தனையோ பல நடிகர்கள் நடிப்பை உதறி தள்ளிவிட்டு அரசியலுக்குள் வந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. அதில் பல பேர் ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். தோற்றவர்களும் இருக்கிறார்கள்.

அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் எம்ஜிஆர் ஜெயலலிதா விஜயகாந்த் போன்றவர்கள் சினிமாவிலும் சாதித்தவர்கள். அதே நேரம் அரசியலிலும் சாதித்தவர்கள். அந்த வரிசையில் விஜய்யும் ஜொலிப்பாரா என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. இதைப்பற்றி நடிகர் ஷ்யாமிடம் ஒருவர் ‘ஏன் அவர் அரசியலுக்கு வருகிறார் தேவை இல்லாமல்?’ என்ற ஒரு கேள்வியை கேட்டாராம்.

இதையும் படிங்க: கழண்டு விழுந்திருமோன்னு பயமா இருக்கு!.. கர்ச்சீப் சைஸ் துணியில் அழகை காட்டும் ஜான்வி!…

அதற்கு ஷ்யாம் கூறிய பதில் தான் இது. ‘ ஹேய் லூசு.. அவர் தான் அரசியலுக்கு வர வேண்டும். வேறு யார் வருவார்? அவர் மட்டும்தான் அரசியலுக்கு வரவேண்டும் .காசுக்காக மட்டும் அவர் அரசியலுக்கு வருகிறார் என்பது எல்லாம் பேசக்கூடாது. அவரிடம் இல்லாத பணமா? அவரிடம் இல்லாத புகழா? அவரிடம் இல்லாத பவரா?

இத்தனை இருந்தும் அவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதற்கு காரணம் மக்கள். அதனால் அவர்தான் வரவேண்டும். இதற்கு முன் எத்தனையோ பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை வைத்து அவர்கள் செய்ததை வைத்து விஜய்யையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது .இவருடைய அரசியல் பலமே வேறு மாதிரியாக இருக்கும்’ என கேள்வி கேட்டவருக்கு பொங்கி எழுந்து பதில் கூறினார் ஷ்யாம்.

இதையும் படிங்க: விஜயுடன் சேர்ந்து ஆட ஆசைப்பட்ட எஸ்.ஏ.சி.. என்ன பாடல் தெரியுமா? இயக்குனர் மறுத்ததன் காரணம்

விஜய் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர். அண்ணா என்று கூப்பிடும் அளவிற்கு ஒரு நெருக்கமான உறவை வைத்திருப்பவர். வாரிசு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். அதிலிருந்து இருவருக்குமான பாண்டி அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் அவரின் அரசியல் பற்றி கேள்வி கேட்ட ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் ஷ்யாம்.

Next Story