விஜயுடன் சேர்ந்து ஆட ஆசைப்பட்ட எஸ்.ஏ.சி.. என்ன பாடல் தெரியுமா? இயக்குனர் மறுத்ததன் காரணம்

Actor Vijay:கோலிவுட்டில் விஜய் இன்று இந்தளவுக்கு ஒரு பெரிய இடத்தை அடைந்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் அவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர். வெற்றி என்ற படத்தில் முதன் முதலில் விஜயை அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சி தொடர்ந்து விஜயை வைத்து பல படங்களை இயக்கினார்.

இருந்தாலும் எஸ்.ஏ.சி நினைத்ததை போல் விஜயால் அந்தளவு ஒரு அந்தஸ்தை ஆரம்பகாலங்களில் அடையமுடியவில்லை. அதனால் அப்போதைய காலகட்டத்தில் ஒரு பீக்கில் இருக்கும் நடிகரை விஜயுடன் சேர்ந்து நடிக்க வைத்தால் ஒரு மாஸ் உருவாகும் என்ற காரணத்தினால் விஜயகாந்தை அப்ரோச் செய்தார் எஸ்.ஏ.சி.

இதையும் படிங்க: முடியெல்லாம் நரைச்சி போச்சி!.. இன்னுமா வாய்ப்பு தேடுற?!.. விஜய் சேதுபதி சந்தித்த அவமானம்!..

விஜயகாந்தும் அதற்கு சம்மதிக்க அதன் பின் உருவானதுதான் செந்தூரப்பாண்டி திரைப்படம். எஸ்.ஏ.சி நினைத்ததை போல் அந்தப் படம் விஜய்க்கு ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இப்படி விஜயின் வளர்ச்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எஸ்.ஏ.சியின் பங்கு என்பது அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில் ஒரு நடிகர் மக்களிடையே பெரிய அளவில் ரீச்சாக குடும்ப ஆடியன்சை கவரவேண்டும். அப்படி விஜய் நடித்த படம்தான் பூவே உனக்காக திரைப்படம். இந்தப் படத்தை சௌத்ரிதான் தயாரித்தார்.முதலில் சௌத்ரியிடம் விக்ரமன் ‘இந்தப் படத்தில் விஜயை நடிக்க வைக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கை கால் செயல் இழந்துவிட்டது.. உதவி பண்ணுங்க!.. காமெடி நடிகர் வெங்கல் ராவ் கோரிக்கை…

அதற்கு சௌத்ரி விஜயா? சரியா வருமா என்று கேட்டாராம். அதற்கு விக்ரமன் ‘ நீங்கள் வேண்டுமென்றால் பாருங்க. ரஜினிக்கு அடுத்த படியாக விஜய்தான் அந்த இடத்தை பிடிப்பார்’ என்ற் அப்பவே கூறினாராம். படத்தின் படப்பிடிப்பை பத்மனாபுரத்தில் எடுத்திருக்கிறார்கள். அந்த ஏரியாவில் இந்துவை தவிற வேறு எந்த மதத்தினருக்கும் அனுமதி கிடையாதாம்.

இருந்தாலும் விஜய் ஒரு நடிகர் என்பதால் அனுமதித்தார்களாம். மற்ற யாரேனும் கிறிஸ்டியன், முஸ்லீமாக இருந்தால் பெயரை சொல்லவேண்டாம். இந்து பெயரை சொல்லுங்கள் என்று பொய் சொல்லித்தான் அங்கு படப்பிடிப்பை எடுத்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டதாம்.

இதையும் படிங்க: ஒரு தடவ சொன்னா புரியாது! விஜய் பற்றி கேட்டதற்கு டென்ஷனான பிரசாந்த்.. என்ன இருந்தாலும் டாப் ஸ்டாருல

ஆனந்தம் ஆனந்தம் என்ற பாடலை படமாக்கும் போது அந்தப் பாடலில் நானும் ஆடுகிறேன் என எஸ்.ஏ.சி ஆசையாக கேட்டாராம். அதற்கு விக்ரமன் உங்கள் மகன் தான் விஜய் என அனைவருக்கும் தெரியும். அதனால் வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

 

Related Articles

Next Story