கை கால் செயல் இழந்துவிட்டது.. உதவி பண்ணுங்க!.. காமெடி நடிகர் வெங்கல் ராவ் கோரிக்கை...

தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்கள் தொடர்ந்து நலிவடைந்து வருவதும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணமின்றி அவதிப்பட்டு திரையுலகை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்பதும் அதிகரித்து விட்டது. அதில் சிலருக்கு உதவி கிடைத்து உயிர் பிழைப்பதும், சிலரோ இறந்து போகும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.

இதில் பெரும்பாலும் சிக்குவது காமெடி நடிகர்கள்தான். வடிவேலுவுடன் பல படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் போண்டா மணி. இலங்கையை சேர்ந்த இவர் தமிழகம் வந்து பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர். சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஒரு தடவ சொன்ன புரியாது! விஜய் பற்றி கேட்டதற்கு டென்ஷனான பிரசாந்த்.. என்ன இருந்தாலும் டாப் ஸ்டாருல

மேலும், தனது சிகிச்சைக்கு உதவும் படி கோரிக்கையும் வைத்தார். அவருக்கு விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் உதவினார்கள். ஆனாலும், அவர் உயிரிழந்தார். அதேபோல், நடிகர் அல்வா வாசுவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நடிகர் பாவா லட்சுமணனும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கேபிஒய் பாலா உட்பட சிலர் உதவினார்கள்.

இப்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் காமெடி நடிகர் வெங்கல் ராவ். இவர். பல பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஆனாலும், தமிழ் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். 30 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் இவர்.

vengal rao

நடிகர் வடிவேலு நடித்த பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்நிலையில், தனக்கு ஒரு கை மற்றும் கால் செயலிழந்துவிட்டதாகவும், சரியாக பேச முடியவில்லை எனவும் திரையுலகினர் தனக்கு உதவ வேண்டும் எனவும் அவர் வீடியோ மூலம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதுவரை யாருக்குமே உதவி செய்யாத வடிவேலு வெங்கல் ராவுக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு மற்ற நடிகர்கள் உதவி செய்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story