நிறைய ரசிகர்களை வைத்திருந்தும், நல்ல நடிகராக இருந்தும் தொடர்ந்து சினிமாவில் நடிக்காதவர் சிம்பு. சிம்பு என்றாலே சிக்கல்தான்.. சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான் என்கிற இமேஜை அவர் உருவாக்கி வைத்திருப்பதுதான் அவரின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.. முன்பெல்லாம் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்கே சோம்பேறித்தனம் படுவார் சிம்பு. ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார். பாதி படத்தில் நடித்துவிட்டு சம்பளத்தை சேர்த்து கேட்பார்.. இதனாலேயே சிம்புவை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் யோசித்தார்கள்..
ஆனாலும் திடீர் திடீரென வந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து விடுவதால் அவரை வைத்து படமெடுக்க சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன்வருகிறார்கள். அதேநேரம் மாநாடு திரைப்படத்திற்கு பின் அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் ஓடவில்லை..
ஒருவழியாக தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் என்கிற படத்தில் சிம்பு நடிக்க தொடங்கினார்.. ‘அப்பாடா இப்பவாவது ஒரு உருப்படியான படத்தில் நடிக்கிறார்’ என ரசிகர்களும் ஆசைப்பட்டார்கள்.. ஆனால் யார் கண் பட்டதோ!.. முதல் கட்ட படப்பிடிப்போடு அரசன் படம் அப்படியே நிற்கிறது..
அதுவும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகவெல்லாம் அறிவித்தார்கள்.. ஆனால் சிம்பு தற்போது மீண்டும் ஃபாரினுக்கு போய்விட்டார். கடந்த சில வருடங்களாகவே சிம்பு துபாயில்தான் இருக்கிறார். அவ்வப்போது லண்டன் மற்றும் அமெரிக்காவுக்கும் அவர் செல்வதாக சொல்லப்படுகிறது.
அரசன் படம் என்னவாயிற்று?.. என்ன பிரச்சனையால் மீண்டும் படம் நிற்கிறது என்கிற தகவல் யாருக்கும் தெரியவில்லை..
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…