உனக்கெல்லாம் எதுக்கு சினிமா?!. கிண்டலடித்த சிம்பு!.. வெறியேத்தி சாதித்து காட்டிய நடிகை!..

Published on: March 3, 2024
simbu
---Advertisement---

சினிமாவில் நடிக்க துவங்கும்போது பலரும் பல அவமானங்களை சந்திப்பார்கள். ஆனால், அந்த அவமானங்களையே படிக்கட்டாய் நினைத்து சிலர் மட்டுமே வெற்றி பெற்று காட்டுவார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி போன்றவர்களுக்கு இது நடந்திருக்கிறது. முகத்துக்கு நேராக அசிங்கப்படுத்துவார்கள்.

அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். இப்படி பேசுகிறார்கள் இனிமேல் இதில் இருக்க வேண்டுமா?.. என யோசித்தால் அவ்வளவுதான்.. சினிமாவில் பெரிய ஆள் ஆக முடியாது. மதுரையிலிருந்து சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடியபோது விஜயகாந்த் சந்திக்காத அவமானம் கிடையாது.

இதையும் படிங்க: நள்ளிரவு 12 மணிக்கு நடிகையை கட்டித்தழுவிய நடிகர்!.. பயில்வான் உடைத்த ரகசியம்!..

‘இந்த மூஞ்சுக்கெல்லாம் சினிமாவுல ஹீரோவா நடிக்கணுமா?’ என கேட்டவர்கள் பலர். ஆனால், அதையெல்லாம் தாண்டித்தான் சினிமாவில் வாய்ப்பை பெற்று ஒரு கட்டத்தில் முன்னணி கதாநாயகனாக மாறி பலரின் வாயையையும் அவர் அடைத்தார். இப்போது தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயை கூட இப்படித்தான் அவமானப்படுத்தினார்கள்.

அதெல்லாம் தாண்டிதான் அவர் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக இருந்த டி.ராஜேந்தரின் மகன்தான் சிம்பு. சிறுவயதிலேயே சினிமாவில் பலவற்றையும் கற்றவர். சிம்பு ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் காதல் அழிவதில்லை. இந்த படத்தை இயக்கியவர் அவரின் அப்பா டி.ராஜேந்தர்.

kadhal

இந்த படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை சார்மி. இதுதான் அவருக்கு முதல் படம். இந்த படத்தின் போது அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை. அதோடு, நடனம் சுத்தமாக வரவில்லை. சிம்புவோ நன்றாக நடனமாட தெரிந்தவர். எனவே, படப்பிடிப்பில் கோபமடைந்த சிம்பு ‘நல்லா ரிகர்சல் பாத்துட்டு வரலாம் இல்ல’ என அவரை திட்டுவாராம்.

 

அதோடு ஒருநாள் ‘உனக்கு சினிமா செட் ஆகாது’ எனவும் சொல்லி இருக்கிறார். ஆனால், ‘நான் கண்டிப்பாக எல்லாவற்றையும் கற்றுகொண்டு ஒரு பெரிய நடிகை ஆகி காட்டுகிறேன்’ என சிம்புவிடம் ஒருநாள் சொல்லி இருக்கிறார். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சிம்பு ‘சார்மி அப்படி என்னிடம் சொன்னபோது நான் வாய் விட்டு சிரித்துவிட்டேன்.

charmy

கண்டிப்பாக அவரால் அது முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால், தெலுங்கு சினிமாவில் நுழைந்து பாட்டு, நடனம் என பெரிய நடிகையாக அவர் மாறியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்போதுதான் யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது எனக்கு புரிந்தது’ என சிம்பு கூறியிருந்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.