ஆடியன்ஸ் பல்ஸ புடிச்சு நடிக்கிற நடிகர் இவர்தான்! சிம்பு சொன்ன அந்த ஹீரோ யார் தெரியுமா?
Actor Simbu: இன்று தமிழ் திரை உலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக நடித்து இன்று ஒரு மிகப் பெரிய ஸ்டார் ஆக உயர்ந்து நிற்கிறார். தற்போது சிம்பு கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். ஏற்கனவே அவரது 48வது படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம்தான் தயாரிக்க இருந்தது.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த அந்த படம் இப்போது வரைக்கும் தொடங்கப்படாமலேயே உள்ளது. இதற்கிடையில் தக் லைப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிம்புவுக்கு வந்ததால் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சிம்பு ஒரு நடிகரைப் பற்றி கூறிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: ரத்னம் பட புரோமோஷனில் இல்லாமல் போன பிரியா பவானி ஷங்கர்… ஏன்? கசிந்த உண்மை..
இன்றைய சூழலில் ரசிகர்களின் பல்ஸை பார்த்து அவர்கள் ரசிக்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகராக கவின் இருக்கிறார் என சிம்பு கூறிய அந்த செய்தி தான் என்ற இணையத்தில் வைரலாகி வருகின்றது. டாடா, லிப்ட் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்ற நடிகராக கவின் இருக்கிறார்.
அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஸ்டார். அந்த படத்தை பியர் பிரேமா காதல் பட இயக்குனரான இளன் இயக்கியிருக்கிறார். ஸ்டார் படத்தை பொருத்தவரைக்கும் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது ஹரிஷ் கல்யாணாம். 2018 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்த ஸ்டார் திரைப்படம் அதன் பிறகு கோவிட் காரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இதையும் படிங்க: விடிய விடிய பார்த்தாலும் சலிக்காது!.. ஒன் சைட் அழகை மூடாம காட்டும் கேப்ரியல்லா!…
அதனாலயே ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். அதன் பிறகு இயக்குனர் இளன் கவின் நடித்த டாடா படத்தை பார்த்து இந்த படத்தில் கவினுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஸ்டார் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளை சிம்புவிற்கு போட்டு காண்பித்தாராம் இளன். அந்த காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு சிம்பு இன்றைய சூழலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தும் நடிகராக கவின் இருந்து வருகிறார். அந்த அளவுக்கு அவர் ஒரு சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் என கவினை பற்றி புகழ்ந்து பாராட்டினாராம்.