Connect with us
simbu

Cinema News

1000 கோடி சொத்துக்கு அதிபதி! சிம்புவின் வளர்ச்சிக்கு குறுக்கே நிக்கும் அந்த கருப்பு ஆடு யார் தெரியுமா?

Actor Simbu: தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக  வலம் வருபவர் நடிகர் சிம்பு. சிம்புவை பற்றி சொல்வதற்கு முன் அவருடைய அப்பாவான டி.ராஜேந்திரன் மிகவும் அடிமட்டத்தில் இருந்து வந்தவர். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவை பற்றி எதுவும் தெரியாமல்தான் டி.ராஜேந்திரன் திரையுலகிற்கு வந்தார்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் டி.ராஜேந்திரன்.உயிருள்ளவரை உஷா படத்தை எடுத்ததன் மூலம் அந்தப் படத்தில் நடித்த உஷாவையே திருமணம் செய்து கொண்டார். மேலும் சிம்புவை எப்படியாவது சூப்பர் ஸ்டாராக்க வேண்டும் என எண்ணியே டி.ராஜேந்திரன் சிம்புவை சிறுவயது முதலே ஊட்டி ஊட்டி வளர்த்தார்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் நடிக்க முடியாமல் திணறிய அஜித்!.. எல்லாமே அந்த நடிகைக்காகத்தானாம்!..

அதன் காரணமாகவே தன் அப்பாவைப் போலவே எல்லா டெக்னிக்கலும் தெரிந்த ஒரு சிறந்த கலைஞராகத்தான் சிம்பு இருந்தார். நடிப்பையும் தாண்டி சிம்பு ஒரு அற்புதமான கிரியேட்டராக இருப்பவர். நடனம், இசை, இயக்கம், நடிப்பு என எல்லாத் துறைகளிலும் தன் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார் சிம்பு.

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் அபிமானங்களை பெற்றார். இப்படி வெற்றிப் பாதையிலேயே பயணித்து வந்த சிம்புக்கு இடையிலேயே சில பிரச்சினைகள் வந்தன.

இதையும் படிங்க: வேற வழி இல்ல ஆத்தா!.. அடிபணிந்த அஜித்!.. பல வருடங்கள் கழித்து அவர் செய்ய போகும் காரியம்!.

சமீபத்தில் கூட ஐசரி கணேஷுடன் சிம்புவுக்கு இருக்கும் பிரச்சினை இப்பொழுதுதான் சரி செய்யப்பட்டு  வருகின்றன. இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் சிம்புவை பற்றி கூறுகையில் ‘சிம்புவுக்கு இருக்கும் சொத்து கிட்டதட்ட 1000 கோடி வரை இருக்கும். அப்படி இருக்கும் வகையில் அவர் மற்றவர்களின் பணத்திற்காக ஆசைப்படுபவர் இல்லை’ என்று கூறினார்.

மேலும் தன் கெரியரில் இப்படி ஒரு வீழ்ச்சியை சிம்பு சந்திக்கிறார் என்றால் அவர் வீட்டிலேயே அவருக்கு எதிராக யாரோ சதி தீட்டுகிறார்கள் என்றும் அவரின் வளர்ச்சியை கெடுக்க நினைக்கும் சிலர் அவர் கூடவே இருக்கிறார்கள் என்றும் அதை சிம்பு சரி செய்து விட்டால் அவர்தான் அடுத்த பெரிய இடத்தை அடையும் நடிகராக இருப்பார் என்று அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்தில் நானா?!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே மம்முட்டி!…

google news
Continue Reading

More in Cinema News

To Top