Connect with us
ajithkumar

Cinema News

படப்பிடிப்பில் நடிக்க முடியாமல் திணறிய அஜித்!.. எல்லாமே அந்த நடிகைக்காகத்தானாம்!..

Ajithkumar: தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் விளங்குபவர்தான் நடிகர் அஜித்குமார். அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்குமார். இவர் பொதுவாக மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது என்பது போல் தான் மற்றவர்களுக்கு செய்யும் உதவி யாருக்கும் தெரிய கூடாது என நினைப்பார். அந்த அளவு இவர் பெரிய மனது கொண்டவரும் கூட. இவர் மேலும் வில்லன், விஸ்வாசம், வீரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:வாய்ப்பு கேட்டா இதுக்குத்தான் பழகுனியானு கேட்பாரு? அஜித்துக்கும் இந்த சீரியல் நடிகருக்கும் இப்படி ஒரு நட்பா?

என்னதான் தன்னை விளம்பர-படுத்தி கொள்ளவில்லை என்றாலும் இவருக்கென  இருக்கும் ரசிகர் பட்டாளமும் அதிகம்தான். இவர் நல்ல குணத்தை இவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம். சன் டிவியில் கயல் நாடகத்தின் மூலம் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி.

இவர் அஜித்துடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது இவர் தான் அஜித்துடன் நடிப்பதால் மிகுந்த படபடப்பில் இருந்துள்ளார். அதனால் பல ரீடேக்குகளையும் வாங்கியுள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் அப்படத்தை விட்டு விலகுவதாக முடிவெடுத்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி!.. அந்த நடிகரால ‘வடை போச்சே’ மொமெண்ட்டில் பார்த்திபன்…

அப்போது அஜித் அவரை அழைத்து எதனால் பயப்படுறீங்க… தப்பா நடிச்சாதான் பழகிக்க முடியும்… எல்லாருமே தப்பு பண்றது சகஜமான விஷயம்தான் என கூறி அவருக்கு உத்வேகம் கொடுத்துள்ளார். பின் சில ஷார்ட்டுகளில் அஜித் ரீடேக் கேட்டாராம்.

உடனே சைத்ரா ரெட்டியிடம் அஜித்குமார் பாருங்க… நானே 4 முறை ரீடேக் கேட்டுள்ளேன்.. அதனால இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.. என கூறினாராம். ஆனால் உண்மை என்னவென்றால் அஜிது வேணுமென்றே அந்த ஷாட்டில் ரீடேக் கேட்டாராம். சைத்ராவின் பயம் போவதற்காக அஜித் இப்படி ஒரு பாடம் எடுத்துள்ளார்.

இதையும் வாசிங்க:சினிமாவில்தான் வீரமெல்லாம்.. நிஜத்தில் அட்டக்கத்திகள்!.. நடிகர்களை விளாசிய பிரபலம்…

google news
Continue Reading

More in Cinema News

To Top