Arasan: அரசனை டீலில் விட்ட வெற்றிமாறன்!.. அதிருப்தியில் சிம்பு!…
அரசன் படம் தாமதமாவதால் சிம்பு அப்செட்..

தொடர் தோல்வி: திறமையான நடிகராக இருந்தும் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருப்பவர் சிம்பு. அதேபோல் தொடர் வெற்றிகளையும் அவரால் கொடுக்க முடிவதில்லை. பொதுவாகவே சிம்பு சரியான நேரத்திற்கு சூட்டிங் வர மாட்டார் என்கிற கெட்ட பெயர் அவர் மீது பல வருடங்களாக இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே தன்னை மாற்றிக் கொண்டு படப்பிடிப்புகளில் சிம்பு கலந்து கொண்டு வருகிறார். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான தக் லைப் திரைப்படம் ஹிட் படமாக அமையவில்லை..
டேக் ஆப் ஆகாத படங்கள்: அந்தப் படத்திற்கு பின் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்கவிருந்தார். ஆனால் கதையில் திருப்தி ஏற்படாமல் அந்த படத்திலிருந்து சிம்பு விலகினார். அதேபோல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கதையில் சிம்பு நடிப்பதாக இருந்து. அதிக பட்ஜெட் என்பதால் அதுவும் நடக்கவில்லை..
வெற்றிமாறனிடம் சிக்கிய சிம்பு: ஒருவழியாக வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்க சிம்பு கமிட் ஆனார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரை முடிந்தபாடில்லை. பொதுவாகவே வெற்றிமாறன் ஒரு படத்தை வருடக்கணக்கில் எடுப்பார். பல மாதங்கள் படப்பிடிப்பை நடத்தி திருப்தியடையாமல் மீண்டும் மாற்றி எடுப்பார். விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதியிடம் 8 நாட்கள் மட்டுமே கால்ஷீட் வாங்கினார். ஆனால், பல மாதங்கள் அந்த படத்திற்காக நடித்தார் விஜய் சேதுபதி. இதுதான் வெற்றிமாறனின் ஸ்டைல்..

ஒரே நேரத்தில் 2 படம்: ஒரு படத்திற்கே இப்படியென்றால் ஒரே நேரத்தில் வெற்றிமாறன் இரண்டு படங்களை இயக்கினால் என்னவாகும்.. அதுதான் இப்போது நடக்கிறது.. ஒருபுறம் சிம்புவை வைத்து அரசன், ஒருபுறம் கென் கருணாஸை வைத்து ராஜன் வகையறா என ஒரே நேரத்தில் 2 திரைப்படங்களை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். எனவே அரசன் திரைப்படம் தாமதமாகி வருகிறது..
சமீபத்தில் சிம்புவிடம் பேசிய வெற்றிமாறன் ‘அரசன் திரைப்படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது.. அவசரப்பட்டு இந்த படத்தை வேகமாக சுருட்ட வேண்டாம்.. நிதானமாக எடுப்போம்’ என சொல்லியிருக்கிறாராம். எனவே அரசன் திரைப்படம் தீபாவளி, பொங்கலுக்கு கூட வராது என்கிறார்கள்..
புது படத்தை துவங்கிய சிம்பு: இதனால் டியூட் படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள பட வேலைகளை துவங் சொல்லியிருக்கிறாராம் சிம்பு. அடுத்த மாதம் அந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது. ஒருபக்கம் அரசன் படத்தை மெதுவாக எடுக்கலாம் சொல்லிவிட்டு ராஜன் வகையறா படத்தை மிகவும் வேகமாக எடுத்து வருகிறாராம் வெற்றிமாறன். தன்னை டீலிங்கில் விட்டுவிட்டு அந்த படத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரே வெற்றிமாறன் என சிம்பு அப்செட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது.












