ஹீரோயின்னு ஃபிக்ஸ் பண்ணதுக்கு பிறகு எதுக்கு இந்த டெஸ்ட்? சிம்பு செஞ்ச வேலைய பாருங்க

Published on: March 4, 2024
simbu
---Advertisement---

Actor Simbu: தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தன் கெரியரை ஆரம்பித்த சிம்பு இன்று வரை சினிமாவை பற்றி நன்கு அறிந்த ஒரு கலைஞராக விளங்கி வருகிறார். கமலை போல சிம்புவும் சினிமாவில் நடிப்பில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும் நன்கு அறிந்தவர். அதனாலேயே சிம்பு மீது கமலுக்கு ஒரு தனி அக்கறை உண்டு என கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உள்ளது.

வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி சிம்பு எடுத்து நடித்த கதாபாத்திரங்கள் பல பெரும் சவாலான கதாபாத்திரங்கள். ஒரு சில கேரக்டர்களை மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கிய நிலையில் அதை சாதாரணமாக செய்து முடிப்பவர் சிம்பு. ஆரம்பத்தில் அவரை ஒரு ப்ளே பாயாகவே இந்த சினிமா சித்தரித்துவைத்திருந்தது. அந்தளவுக்கு அவருடைய படங்களில் சில அடல்ட் காட்சிகளும் இருந்ததுதான் காரணம்.

இதையும் படிங்க: எவ்வளவோ படம் கைவிட்டு போச்சு.. இந்த ரெண்டு படத்துல மட்டும் நடிச்சிருந்தா? மாஸை லாஸ் செய்த அஜித்

ஆனால் மாநாடு படம் முற்றிலுமாக அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது. சிம்புவின் கெரியரிலேயே அதிக வசூலை தந்த படமாக மாநாடு படம் அமைந்தது. தற்போது கமல் ப்ரடக்‌ஷனில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். அந்தப் படமும் சிம்புவின் கெரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக தயாராகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சிம்பு தன்னுடன் நடித்த நடிகைகளை பற்றி ஒரு பேட்டியில் கூறியதை சித்ரா லட்சுமணன் அவருடைய யுடியூப் சேனலில் கூறியிருக்கிறார். வல்லவன் திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடித்த சிம்பு அதில் இருந்தே அவருடன் காதல் வயப்பட்டார். அதைப் பற்றி அந்த நேரத்தில் இருவருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதன் பிறகு இருவரும் பிரிந்து அவரவர் வழியில் சென்று விட்டனர். இருந்தாலும் நயன்தாராவைப் பற்றி இப்போதுவரைக்கும் சிம்பு மனதில் ஒரு நல்ல அபிப்ராயமே உள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் சிக்க வைத்த ரோகிணி… அசால்ட்டா டீல் செய்த முத்து… குடும்பமா எகிறிட்டு வராங்க போலயே!

என்னுடன் நடித்த நடிகைகளில் நடிப்பு அரக்கி என யாரையும் பார்த்ததில்லை. அந்த திறமை நயனிடம் மட்டுமே உள்ளது. மிகவும் எளிமையானவர். இயக்குனர்களுக்கான நடிகை நயன் என சிம்பு ஒரு பேட்டியில் கூறியதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்தார். அதே போல் காளை திரைப்படத்தில் நடித்த நடிகை வேதிகாவை பற்றியும் சிம்பு சில விஷயங்களை கூறியிருக்கிறாராம். அதாவது என்னுடன் ஆடி நடித்த நடிகைகளில் வேதிகா ஒரு திறமையான நடனம் ஆடத் தெரிந்த நடிகை என்பதை இந்தப் படத்தில்தான் பார்த்திருக்கிறேன் என்று கூறிய சிம்பு,

அவர் நடன திறமையை சோதிக்க ஒரு டெஸ்ட் வைத்தாராம் சிம்பு. சில சவாலான ஸ்டெப்புகளை ஆட வைத்திருக்கிறார். இருந்தாலும் வேதிகா சளைக்காமல் ஆடி சிம்புவை அசத்தியிருக்கிறார். அழகிலும் சிறந்தவர் வேதிகா என சிம்பு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஆனந்த் அம்பானி திருமண விழாவுக்கு ஜம்முன்னு ரெடியான ரஜினி குடும்பம்!.. வைரலாகும் போட்டோவை பாருங்க!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.