சிம்பு பலமுறை ரசித்து ரசித்து பார்த்த அந்த படம்!.. அதுவும் அந்த நடிகைக்காக!..

by சிவா |   ( Updated:2024-03-04 08:40:07  )
சிம்பு பலமுறை ரசித்து ரசித்து பார்த்த அந்த படம்!.. அதுவும் அந்த நடிகைக்காக!..
X

அப்பா டி.ராஜேந்திரால் சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க துவங்கியவர் சிம்பு. சின்ன வயதிலேயே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். டி.ஆர். இயக்கிய காதல் அழிவதில்லை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதன்பின் பல படங்களிலும் ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.

நன்றாக நடனமாட தெரிந்த நடிகர்களில் சிம்பு முக்கியமானவர். அதோடு, ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம், இசை, எடிட்டிங் என எல்லா ஏரியாவிலும் கில்லியாக இருப்பவர். அதேநேரம் எல்லாம் இருந்தும் படப்பிடிப்பிற்கு சரியாக போகமாட்டார். இதுவே இவருக்கு பெரிய கெட்டப்பெயரை கொண்டு வந்தது.

இதையும் படிங்க: இந்த தயாரிப்பாளருக்காக ஸ்கூட்டி ஓட்டுவதையே நிறுத்திய ரஜினிகாந்த்.. அட என்ன பாசமோ?

அந்த பெயரை மாற்ற அவரும் பல வருடங்களாக போராடி வருகிறார். ஆனாலும் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொள்வார். விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பின் மாநாடு படம் மட்டுமே அவருகு பெரிய ஹிட் படமாக அமைந்தது. அவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

சிம்பு ஒரு நல்ல ரசிகரும் கூட. பல வருடங்கள் அஜித்தின் ரசிகராக இருந்தவர். அதேபோல், சூப்பர்ஸ்டார் ரஜினியை தனது படங்களில் காப்பி அடித்து அவரை போல ஸ்டைல் செய்து வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் எல்லோரும் அதை கலாய்க்க அதை நிறுத்திவிட்டார். சிம்புவுக்கு மிகவும் பிடித்த நடிகைகள் பலரும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இத்தனை கோடி வசூலா?!. முதல் மலையாள திரைப்படம்!.. தமிழகத்தில் வசூலை அள்ளும் மஞ்சுமெல் பாய்ஸ்!..

அதில் முக்கியமானவர் ஜோதிகா. ஜோதிகா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தை கிட்டத்தட்ட ஜோதிகாவுக்காக மட்டுமே 30 முறைக்கும் மேல் பார்த்தாராம் சிம்பு. அந்த அளவுக்கு ஜோதிகாவும் நடிப்பை ரசித்திருக்கிறார். ஜோதிகா பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சிம்பு ‘எனக்கு மிகவும் பிடித்த நடிகை அவர். மன்மதன் படம் உருவானபோது அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என எனக்கு தோன்றியது.

எனவே, அவரை சந்தித்து கதை சொன்னேன். உடனே நடிக்க சம்மதித்தார். அதை நானே எதிர்பார்க்கவே இல்லை. மன்மதம் படத்திற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். எந்த பந்தாவும் செய்யமாட்டார். எப்படிப்பட்ட காட்சி என்றாலும் ஒரே டேக்கில் நடித்து விடுவார்’ என சிம்பு சொல்லி இருந்தார்.

இதையும் படிங்க: ‘மஞ்சுமெல் பாய்ஸ’ கொண்டாடுற நாம ஏன் இவரயும் கொண்டாடக் கூடாது? ரஜினி-கமலை மிஞ்சிய மம்மூட்டி

Next Story