Connect with us
simbu

Cinema News

சீட் கிடைக்காமல் அஜித் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு!.. மாப்பிளைக்கு அவ்வளவு வெறியா!..

பொதுவாக நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், பல நடிகர்களே சில நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு எம்.ஜி.ஆருக்கு சத்தியராஜ், சரத்குமார் போன்ற பல நடிகர்கள் ரசிகர்களாக இருந்தார்கள். கமல், ரஜினி போன்ற பல நடிகர்கள் சிவாஜிக்கு ரசிகர்களாக இருந்தார்கள்.

அதேபோல், ரஜினி, கமலுக்கு பின்னால் வந்த பல நடிகர்கள் அவர்களுக்கு ரசிகர்களாக இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களே கமலுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அதேபோல், பல இளம் இயக்குனர்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தன் படத்தில் விஜய் படத்தை போட சொன்ன அஜித்!. இது புரியாம அடித்துக்கொள்ளும் ஃபேன்ஸ்..

விஜயும், அஜித்துமே கூட 90களில் பாடல்களில் நடனம் ஆடும்போது ரஜினி பட போஸ்டரை ஒட்டி தலைவா என பாடி நடனம் ஆடுவார்கள். இப்போது அவர்களுக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ரஜினி – கமலுக்கு பின் அஜித் – விஜய் ஆகியோருக்கும் திரையுலகை சேர்ந்த பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

துவக்கத்தில் தீவிர ரஜினி ரசிகராக இருந்தவர் நடிகர் சிம்பு. லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற அடைமொழியுடன் அறிமுகமானவர். ரஜினியை போல ஸ்டைல் செய்வது, பன்ச் வசனங்கள் பேசுவது என அவரின் பாணியைத்தான் அவர் பின்பற்றினார். ஆனால், ஒரு கட்டத்தில் அஜித் ரசிகராக மாறினார்.

இதையும் படிங்க: சீடியை தூக்கி கொண்டு வாய்ப்பு தேடி அலைந்த அட்லீ!.. சினிமாவில் நுழைந்தது இப்படித்தான்!…

பல பேட்டிகளில் ‘நான் அஜித் ரசிகன்’ என சொல்லியிருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தின் சத்யம் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆசைப்பட்ட சிம்புவுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே, அங்கேயே இருந்து அடுத்த காட்சியை பார்க்க முடிவெடுத்தார்.

டிக்கெட் இல்லை என்றாலும் தியேட்டருக்கு உள்ளே போன சிம்புவுக்கு உட்கார சீட் கிடைக்கவில்லை. எனவே, படம் முழுவதையும் நின்று கொண்டே பார்த்தாராம். அந்த அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகராக இருந்தவர்தான் சிம்பு.

இதையும் படிங்க: த்ரிஷா அக்கா விஜய் சொல்லாததையா மன்சூர் சொல்லிட்டாரு? பொங்கி எழும் நெட்டிசன்கள்

google news
Continue Reading

More in Cinema News

To Top