சீடியை தூக்கி கொண்டு வாய்ப்பு தேடி அலைந்த அட்லீ!.. சினிமாவில் நுழைந்தது இப்படித்தான்!...
Director Atlee: அட்லி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராய் வலம் வருபவர். ஆரம்பத்தில் உதவி இயக்குனராய் இருந்த அட்லி ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இளைஞர்கள் அனைவரும் விரும்பும் படமாக இப்படம் அமைந்தது.
பின் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். இவரின் வளர்ச்சிக்கும் விஜய்யும் ஒரு காரணம். அதனாலேயே விஜய்யும் இவரும் நிஜ வாழ்வில் மிகவும் நெருக்கமானவர்களும் கூட. இவர் தந்து சொந்த வாழ்க்கையில் எந்தவொரு முடிவெடுத்தாலும் விஜய்யுடன் கலந்தாலோசிக்கும் பழக்கம் கொண்டவர்.
இதையும் வாசிங்க:மன்சூர் அலிகான் மட்டுமில்லை!.. ரோபோ சங்கர், ராதா ரவி எல்லாமே இப்படி தான்.. சின்மயி காட்டம்!..
இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சமீபத்தில் கால் பதித்தார். பிரபல பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் இவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி தந்தது.
இவர் தனது சிறுவயதிலேயே சினிமாத்துறைக்கு வர ஆசைப்பட்டாராம். ஆனால் இவரது தந்தை டிப்ளமோ இன்ஜினியராம். அதனால் தனது மகன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் அட்லியோ சினிமா துறைக்கு செல்ல வேண்டும் என கேட்டாராம். முதலில் சம்மதிக்காத தந்தை பின் சரி சொல்லிவிட்டாராம். ஆனால் சினிமா துறையில் நீ போ என்ன செய்ய போகிறாய் என முதலில் ஏளனமாக சொன்னாராம்.
இதையும் வாசிங்க:கலாய்த்த ரசிகர்கள்.. ஓடிப்போய் அஜித்திடம் ஒப்பாரி வைத்த வெங்கட்பிரபு.. தல சொன்னது இதுதான்…
அட்லியை பார்த்து மற்றவர்கள் எது உன்னால் முடியாது என கூறுகின்றனரோ அதை முடித்து காட்டியே தீர்வாராம். அந்த உணர்வுதான் இவரை சினிமாவில் உயர்த்தியதாக இவர் தெரிவித்திருந்தார். பின் இவர் பல இயக்குனர்களிடம் சென்று தனது ஷாட் ஃபிலிம்களை சீடியில் கொடுத்தாராம். அவ்வாறு அவர் கொடுக்கும் போதுதான் நாம் ஏன் ஷங்கரிடம் இதை கொடுக்க கூடாது என எண்ணி அவரிடமும் கொடுத்தாராம்.
உடனே ஷங்கர் அலுவலகத்திலிருந்து அட்லிக்கு போன் வந்ததாம். முதலில் நம்மை ஏமாற்றுகிறார்கள் என நினைத்தாராம். ஆனால் ஷங்கர் அலுவலகத்திற்கு சென்ற அட்லிக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்ததாம். ஷங்கர் தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்ற அட்லிக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அதனை தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அட்லி தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிங்க:தனுஷின் மகன் சிக்கியது இப்படித்தான்!. இது எப்போது நடந்தது தெரியுமா?…
COPYRIGHT 2024
Powered By Blinkcms