சிம்புவின் பைக் பெஸ்டி யார் தெரியுமா? படம் பார்க்க போன இடத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்

simbu
Actor Simbu: தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே நடிக்க தொடங்கியவர் நடிகர் சிம்பு.குழந்தையாக இருக்கும் போதே கேமிரா எங்கு இருக்கிறது? எப்படி நின்றால் ஃபோக்கஸ் விழும் என்பதை நன்கு அறிந்தவர். கிட்டத்தட்ட கமல் மாதிரியே சினிமாவை பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்தவர் சிம்பு.
தற்போது சிம்பு கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு வரலாற்றுப் பின்னணியில் அமைந்த கதையில் நடித்துவருகிறார். அதற்கான நீண்ட தலைமுடியுடன் பல நாள்களாகவே சுற்றி வருகிறார். அந்தப் படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தனுஷ் நடிக்கும் படத்தில் கமல், ரஜினி, சிம்பு? இதெல்லாம் வெறும் கனவா இல்லை நனவா?..
கிட்டத்தட்ட கே.ஜி.எஃப் தரத்தில் அமைந்திருந்தது. ஆரம்பத்தில் ப்ளே பாயாக இருந்த சிம்பு சமீபகாலமாக ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய ஒரு அற்புதமான நடிகராக மாறியிருக்கிறார். மாநாடு படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்துதல போன்ற தரமான படங்களில் நடித்து மேலும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மின்னினார் சிம்பு, இந்த நிலையில் சிம்புவை பற்றி தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதாவது சிம்புவுக்கு பைக் பெஸ்டி என ஒரு பிரபலம் இருந்தாராம். எங்கே போனாலும் பைக்கில் அவருடன் போவதைதான் சிம்பு வழக்கமாக கொண்டிருந்தாராம்.
இதையும் படிங்க: அரசியல் ரூட் எடுக்கும் தளபதி… கோலிவுட்டின் டாப் சம்பளம்… விஜயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளோ தெரியுமா?
அவர் வேறுயாருமில்லை. மறைந்த இயக்குனரும் நடிகருமான மாரிமுத்துதானாம். இவருடன்தான் சிம்பு அடிக்கடி பைக்கில் வெளியே செல்வாராம். இருவரும் சேர்ந்து குத்து படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்கள். அப்போது சிம்பு முகத்தில் கர்சீஃபை கட்டியிருந்தாராம். படம் முடிந்து வெளியே வர ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிம்பு முகத்தில் இருந்த கர்சீஃப் அவிழ்ந்து விட்டதாம்.
அவ்வளவுதான் சிம்புவை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்களாம். இந்த செய்திதான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: எஸ்.பி.பி வர லேட் ஆனதால் மலேசியா வாசுதேவனுக்கு கிடைத்த வாய்ப்பு!.. அது மட்டும் நடக்கலன்னா!..