ஜெயிச்சுட்டா உங்கள வந்து சந்திப்பேன்.. அஜித்திடம் சவால் விட்ட நடிகர்! கடைசில என்னாச்சு தெரியுமா?

Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இந்த வருடம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் பொங்கல் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம் அந்தப் படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழ இப்போதுதான் அதற்கு தீர்வு கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க: ஹாலிவுட் லெவல்ல சிவாஜி படம் இருக்கேன்னு பாராட்டிய புரட்சித்தலைவர்… என்ன படம்னு தெரியுமா?

இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு அஜர்பைஜான் சென்றிருக்கிறது. இந்த நிலையில் அஜித்தை பற்றி ஒரு சுவாரசிய தகவலை பிரபல இயக்குனரும் நடிகருமான சிங்கம் புலி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் ‘உன்னை தேடி’. அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மாளவிகா நடித்திருப்பார்.

சுந்தர் சி படங்கள் எல்லாமே காமெடி கலந்த கமர்சியல் படங்களாக அமைந்திருக்கும். அதே போல தான் உன்னை தேடி திரைப்படமும் காமெடியோடு காதல் செண்டிமெண்ட் என ஒரு ஃபுல் பேக்கேஜ் ஆக அந்த படத்தை கொடுத்திருப்பார் சுந்தர் சி. ஆனால் முதலில் இந்த படம் ஓடுமா ஓடாதா என்ற ஒரு சந்தேகத்திலேயே அஜித் நடித்தாராம் .

இதையும் படிங்க:விஜயை பத்தி பேசினா ‘மூடிட்டுப் போ’ன்னு சொல்லுவாரு அஜித்!.. ரகசியத்தை பகிர்ந்த நடிகர்!..

படத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டையும் சிங்கம்புலி தான் எழுதியிருந்தாராம். அதனால் சிங்கம்புலியிடம் அஜித் ‘அடிக்கடி இந்த படம் ஹிட் ஆகுமா ஆகாதா’ என கேட்டுக்கொண்டே இருப்பாராம். அதற்கு சிங்கம் புலி ‘இந்த படம் ஒரு வேளை ஹிட்டானால் மறுபடியும் உங்களை வந்து சந்திக்கிறேன். அப்படி படம் ஓடவில்லை என்றால் உங்கள் பக்கமே நான் வரமாட்டேன்’ என்று கூறினாராம்.

singam

singam

ஆனால் உன்னை தேடி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றியடைய அந்த படத்தின் வெற்றி விழாவிற்கு அஜித் உட்பட அனைவரும் கலந்து கொண்டார்களாம். அப்போது அஜித் மெதுவாக சிங்கம்புலி அருகில் வந்து ‘அடுத்ததாக நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம். அதற்காக கதையை தயார் செய்யுங்கள்’ என கூறினாராம். அதன் பிறகு வந்த படம் தான் ரெட் என சிங்கம் புலி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படத்தை கைவிட்ட கலாநிதிமாறன்!.. சாட்டிலைட் உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!.

 

Related Articles

Next Story