Connect with us
maha

Cinema News

‘மகாராஜா’ படத்துக்கு பிறகு எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு! புலம்பும் நடிகர்

Maharaja Movie: விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. இது விஜய் சேதுபதிக்கு ஐம்பதாவது படம் .ஒவ்வொரு நடிகர்களுக்கும் இருக்கிற ஒரே கனவு தன்னுடைய 25 ஆவது படம் 50வது படம் நூறாவது படம் என்பது அவர்களுடைய கெரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைய வேண்டும். அதுவும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதுதான்.

அது விஜய் சேதுபதி சினிமா வாழ்க்கையிலும் நிஜமாகி இருக்கிறது. இந்த மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. சொல்லப் போனால் ரஜினி கமலுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் சூர்யா கார்த்திக் இவர்கள் வரிசையில் அஜித்திற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு தான் ஐம்பதாவது படம் ஒரு வெற்றி திரைப்படம் ஆக அமைந்திருக்கிறது என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: என்னது மைனாவின் கணவர் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா? நம்பியாருக்கே டஃப் கொடுத்தவர் ஆச்சே

இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் அந்தப் படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்த சிங்கம் புலி சமீபத்திய பேட்டிகள் அவருடைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த படத்திற்கு முன்பு வரை விஜய் சேதுபதி நடித்த பல படங்களில் சிங்கம்புலியும் நடித்திருக்கிறார்.

ஆனால் அந்தப் படத்தில் விஜய் சேதுபதியை பாராட்டி பேசுவதும் புகழ்ந்து பேசுவதும் அவருடனையே பயணம் செய்வது மாதிரி என கதாபாத்திரமாக இருக்கும் .ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நல்லா இருக்கக் கூடாது அவருடைய வாழ்க்கையை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்ற ஒரு நெகட்டிவ் ஷேடில் நடித்திருக்கிறாராம். சிங்கம் புலி அதுவும் ரேப் சீனில் எல்லாம் நடித்திருப்பதாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

singam

singam

இதையும் படிங்க: கண்ணதாசன் பாடலைப் பாட முடியாமல் ஓடிய சந்திரபாபு… அதுல நடந்த களேபரத்தைப் பாருங்க..!

அதனால் இந்த படத்திற்கு பிறகு என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரியவில்லை. அதற்காக நான் காசுக்காக எதையும் செய்வேன் எப்படியும் நடிப்பேன் என்ற அர்த்தமும் கிடையாது .இந்த கதைக்கு தேவைப்பட்டதால் அதுவும் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் சொன்னதால் நான் நடித்திருக்கிறேன்.

இதற்கு முன்பு வரை என்னை சிறு குழந்தைகள் பெரியவர்கள் பார்க்கும்போது எல்லாம் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வருவாரே அவர் தானே எனக்கு கூறுவார்கள். ஆனால் மகாராஜா படத்திற்கு பிறகு என்னை அப்படி கூப்பிட மாட்டார்கள். அதை நினைக்கும் போது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் எல்லாம் சினிமாவிற்கு தானே என சிங்கம் புலி மிகவும் அந்த பேட்டியில் புலம்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: கல்கியில் கமல் நடிக்க சம்மதிச்சதுக்கு இதுதான் காரணமா? என்ன ஒரு புத்திசாலித்தனம்?!

google news
Continue Reading

More in Cinema News

To Top