Cinema History
8 வருடத்தில் 60 திரைப்படமா? யாருப்பா அந்த நடிகர்? எல்லாத்துக்கும் அந்த ஒரு படம்தான் காரணமா?
Actor Sivaji: தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 50 ஆண்டுகளில் தோன்றிய ஒரு அற்புதமான நடிகர். நடிப்பு பல்கலைக்கழகம். இன்றைய காலகட்டத்தில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகர்களும் ஏதாவது ஒரு வகையில் சிவாஜியின் பாதிப்பை தன் மனதில் வைத்துக்கொண்டு தான் நடிக்க வருகிறார்கள்.
எந்த ஒரு கதாபாத்திரமானாலும் அதை அப்படியே திறம்பட நடித்துக் கொடுப்பதில் தலை சிறந்த நடிகர். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று புராணங்கள் என முக்கியமான தலைவர்களின் கதாபாத்திரங்களை ஏற்று அவர்களை தன் கண் முன் நிறுத்தியவர் சிவாஜி. சிவாஜியின் நடிப்பு மிகை நடிப்பு என்று ஒரு சாரார் விமர்சித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சிவபெருமானாக வந்து பாடிய சிவாஜி… கண்களால் செய்த அந்த லீலை.. மனுஷன் மாஸ் காட்டியிருக்காரே!
ஆனால் கலை உலகில் மிகச்சிறந்த சாதனையாளராகவே வாழ்ந்திருக்கிறார். அவர் முதன் முதலில் 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் இந்த தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதலில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சிவாஜி அப்போது அவருடைய கணீர் வசனத்தால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தின் வாய்ப்பு அவருக்கு தற்செயலாக கிடைத்திருந்தது.
அந்தப் படத்தில் இருந்து சிவாஜியை தேடி பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. 1952 ஆம் ஆண்டிலிருந்து 1960 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 8 வருடத்திற்குள் 60 படங்கள் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் சிவாஜி. அவருடைய 60வது படமாக குறவஞ்சி திரைப்படம் அமைந்தது. அந்த காலத்தில் வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு படங்கள் நடித்துக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: துப்பாக்கியால் சுடப்போன சிவாஜி!.. நடிகையால் மார்க்கெட்டை இழந்த பிரபு!.. இவ்வளவு நடந்திருக்கா!..
ஒரு படத்திற்கு 50 அல்லது 60 நாட்கள் கால் சீட்டு கொடுக்கும் பட்சத்தில் அத்தனை படங்களில் நடித்திருந்தார் என்றால் தூங்குவதற்கு கூட நேரம் இல்லாமல் தான் சினிமாவை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்து இருக்கிறார் சிவாஜி. இந்த அளவுக்கு நடிப்பின் மீது முழு கவனத்தையும் கொண்டிருந்த சிவாஜி ஒரு கதாபாத்திரத்திற்கு எப்படி தன்னை தயார் படுத்தி இருப்பார் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.
இந்தப் படம் பிடிக்கும் பிடிக்காது. இந்த கதாபாத்திரம் பிடிக்கும் பிடிக்காது என எப்போதுமே அவர் நினைத்ததே இல்லையாம். எந்த வாய்ப்புகள் அவரை தேடி வந்ததோ அதை அப்படியே நடித்து கொடுத்தாராம். எந்த கேள்வியும் கேட்காமல் திரைப்படங்களில் நடித்து அதில் 70, 80 சதவீதம் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் சிவாஜி. ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் ஒரு தடவைக்கு பல தடவை கதைகளை கேட்டு நடித்தாலும் அவர்களின் வெற்றி சதவீதம் என்பது மிகக் குறைவே.