Cinema News
அவருக்கு முன்னாடி நான்லாம் சின்ன பையன்!.. சிவாஜியையே பிரமிக்க வைத்த நடிகை…
Sivaji Ganesan: சிவாஜி எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். நடிப்பின் இலக்கணமாக இருந்தவர். சிறுவயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை மெருகேற்றிக்கொண்டவர். முதல் படமான பராசக்தியிலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை சிறந்த நடிகர் என நிரூபித்தவர்.
அதன்பின் பல திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லுமளவுக்கு பல வேடங்களில் நடித்திருக்கிறார். அதனால்தான் நடிகர் திலகம் என்கிற பட்டமே அவருக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: சிவாஜி படத்தால் கடுப்பான படக்குழு!… அதையே படத்தலைப்பாக்கிய தயாரிப்பு நிறுவனம்!..
ஆனால், இதே சிவாஜி ஒரு நடிகையை ஆச்சர்யமாக பார்த்தார், பல இடங்களில் அவரை பாராட்டி பேசினார் என்றால் அது நடிகை பானுமதி. இப்போதைய நயன்தாரா போல 1950களில் இருந்தவர்தான் பானுமதி. இவரிடம் எப்போதும் ஒரு ஆண்மைத்தனம் இருக்கும். திமிறாகவே இருப்பார். அதேநேரம், மிகவும் சிறந்த நடிகையும் கூட.
எனவே, இவரோடு நடிக்க வேண்டும் என அப்போதிருக்கும் சிவாஜி, ஜெமினி கணேசன் என பலரும் ஏங்கியிருக்கிறார்கள். பானுமதியுடன் ராணி லலிதாங்கி, ரங்கூன் ராதா, மணமகன் தேவை, கள்வனின் காதலி, சாரங்கதாரா, தெனாலி ராமன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிவாஜி நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர், சிவாஜிக்கே டஃப் கொடுத்த அந்த கட் அவுட்.. இப்படி எல்லாமா நடந்துச்சு…
ஒருமுறை பானுமதி பற்றி பேசிய சிவாஜி ‘நான் அறிமுக நடிகராக இருக்கும்போது அவருடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனவே, அவரை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்கிற பயமும் எனக்கு வந்தது. அவருக்கு முன் நான் ஒரு சின்ன பையன். அவரை போல ஒரு நடிகையை நான் பார்த்ததே இல்லை’ என சொல்லியிருக்கிறார்.
பத்மினி பன்முகத்திறமை கொண்டவர். நடிகை, பாடகி, இயக்குனர், தயாரிப்பாளர் என 50களில் கலக்கியவர் இவர். நாடோடி மன்னன் திரைப்படத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறினார். மலைக்கள்ளன் உள்ளிட்ட சில படங்களில் எம்.ஜி.ஆருடன் அவர் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: இவன் சினிமாவில் நடிக்க கூடாது!. கறாரா சொன்ன சிவாஜி!.. பிரபு ஹீரோவான கதை இதுதான்!..