தம்பி நான் யாருன்னு தெரியுமா?!... கிரிக்கெட் வீரரிடம் வம்பிழுத்த நடிகர் திலகம்!...

sivaji
Sivaji Ganesan: தமிழ் சினிமா உலகை பொறுத்தவரை நடிப்புக்கு இலக்கணம் அமைத்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே. நாடகங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் அவருக்கு சினிமாவில் கை கொடுத்தது. அதோடு, நடிப்பு என்பது கூடப்பிறந்து போல அவருக்கு மாறிப்போனது.
அதனால்தான் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அப்படி அவர் நடித்த பராசக்தி திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது. முதல் படமே இப்படி ஒரு சூப்பர் ஹிட் படமாக எத்தனை நடிகர்களுக்கு கிடைத்திருக்கும் என்பது சந்தேகம்தான்.
இதையும் படிங்க: ஒரு குருவை அசிங்கமா பேசுன போது ரசிச்ச சிஷ்யன் கார்த்தியா தான் இருக்கும்… கார்த்தி என்ன சிவாஜியா? நடிகர் அதிரடி..!
சினிமாவில் இவர் போடாத வேஷமே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்தவர். ஏழை, பணக்கார முதலாளி, வாலிபர், நடுத்தர வயது மனிதர், முதியவர், கடவுள் அவதாரங்கள், மருத்துவர், வழக்கறிஞர், மில் தொழிலாளி, சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர், புராணங்களில் வந்த கதாபாத்திரங்கள் என ஒன்றையும் அவர் விட்டுவைக்கவில்லை.
எனவே, உலகம் முழுவதும் நடிகர் திலகம் பிரபலாகியிருந்தார். ஹாலிவுட் நடிகர்கள் கூட சிவாஜியின் நடிப்பை பார்த்து அசந்துபோனார்கள். அதனால்தான் அவருக்கு செவாலியர் விருந்து கிடைத்தது. மேலும், கனடாவில் ஒரு பகுதியில் ஒரு நாள் மேயர் பதவியும் அவருக்கு கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜி நடித்தும் ரிலீஸ் ஆகாத படங்கள்!. அட இவ்வளவு இருக்கா?!…
80களில் ஒருமுறை இந்திய கிரிக்கெட் அணி சார்ஜாவில் விளையாடியபோது சிவாஜி அதை நேரில் பார்க்கப்போனார். அப்போது இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சிவாஜியை பார்த்து புன்னகைத்துள்ளார். அவரிடம் சிவாஜி ‘தம்பி நான் யாருன்னு தெரியுதா?’ என கேட்டுள்ளார். பதறிய ஸ்ரீகாந்த் ‘சார் என்ன இப்படி கேட்டுட்டீங்க?.. நடிகர் திலகம் நீங்க!.. உங்களை தெரியாமல் இருக்குமா?..’ என கேட்டுள்ளார்.
அதற்கு சிவாஜி ‘தம்பி என்னை தமிழ்நாட்டில் மட்டும்தான் தெரியும். உங்களை உலகம் முழுக்க தெரியும்’ என சொல்ல, ஸ்ரீகாந்தோ ‘சார்.. உலகத்தில் கிரிக்கெட் ஆடும் நாடுகள் எட்டு மட்டும்தான். அங்கு மட்டும்தான் என்னை தெரியும். ஆனால், நீங்கள் அப்படி அல்ல., உங்களை உலகத்தில் இருக்கும் தமிழர்கள் உட்பட எல்லோருக்கும் தெரியும். உங்களை என்னோடு நீங்கள் ஒப்பிடலாமா?’ என கேட்டாராம்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் சலிக்க சலிக்க பார்த்த சிவாஜி படம் அதுதான்!.. அவ்வளவு தீவிர ரசிகரா?!..