எல்லாம் பண்ணிட்டேன்!.. அவன மாதிரி நான் நடிக்கணும்!.. இயக்குனரிடம் சொன்ன நடிகர் திலகம்!..

Published on: April 14, 2024
sivaji
---Advertisement---

நடிகர் சிவாஜி எப்படி நடிப்பார் என சொல்லவே தேவையில்லை. சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கியபோதே நடிப்புதான் தனது வாழ்க்கை முடிவெடுத்தார் சிவாஜி. நடிப்பு அவரின் உடம்பின் ரத்த நாளங்களில் ஊறிப்போனது. நாடகங்களில் பல கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

அறிமுகமான முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை கொடுத்து ‘யார் இவர்?’ என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர். அதன்பின் அவர் ஏற்காத வேஷமே இல்லை என சொல்லும் அளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்தார். நடிப்பிற்கே இலக்கணம் நடிகர் திலகம்தான் என ரசிகர்கள் கூறினார்கள்.

இதையும் படிங்க: ஹாலிவுட்டின் உல்டாவாக வந்த தமிழ் படங்கள்… எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் யாரும் தப்பலயே!..

சிறு வயதிலேயே முதியவர் வேடத்தில் நடித்தவர் இவர். சிவாஜி பார்த்து வளர்ந்தவர்தான் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் கமல் 5 வயது சிறுவனாக அறிமுகமான போது சிவாஜி ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். பார்த்தால் பசி தீரும் படத்தில் சிறுவன் கமல் சிவாஜியுடன் நடித்திருந்தார்.

கமல் மீது சிவாஜிக்கு எப்போதும் பெரிய அன்பு உண்டு. அதற்கு காரணம் கமலின் நடிப்பு திறமை, சினிமாவுக்காக தன்னை அர்பணித்துக்கொள்ளும் விதம் சிவாஜியையே ஆச்சர்யப்படுத்தியதுண்டு. கமலுடன் இணைந்து ‘தேவர் மகன்’ படத்திலும் சிவாஜி நடித்திருந்தார். அந்த படத்தின் கதையே சிவாஜிக்கு பின் அவரது இடத்தில் கமல் அமர்கிறார் என்பதுதான். அதை ஆமோதித்து, புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார் சிவாஜி.

இதையும் படிங்க: ரசிகர்களைக் கதறி அழவைத்த சிவாஜியின் அந்த ஏழு படங்கள்!.. மறக்க முடியாத பாசமலர்!..

இந்நிலையில்தான் சின்னக் கவுண்டர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசும்போது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். ‘நான் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு சாதனை படத்தை இயக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், சிங்காரவேலன் படமே பெரிய சாதனையை செய்தது. கமல்ஹாசன் ஒரு அசாத்திய நடிகர். அந்த படத்திற்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு மிகப்பெரியது. அவரை போன்ற நடிகரை பார்க்கவே முடியாது.

ஒருமுறை நடிகர் திலகத்திடம் ஒரு கதை சொன்னேன். அவரோ ‘நல்லாருக்கடா. நான் நிறைய நடிச்சிட்டேன்.. இந்த கமல் நடிக்குறான் இல்ல.. செட்டில்ட் ஆக்டிங்.. வந்து நின்னு ஒரு எக்ஸ்பிரசன் கொடுத்துட்டு போறான்.. அதெல்லாம் பார்க்கும்போது நான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணிடனோன்னு தோணுது. அவன மாதிரி இந்த படத்துல நடிக்க முயற்சி பண்றேன்’ என சொன்னார். நடிப்பின் இமயம். அவரையே ஒரு நடிகர் ஆச்சர்யபடுத்தினார் என்றால் அது கமல்தான்’ என பேசி இருந்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.