நான் அப்படிப்பட்டன் கிடையாது! தனுஷை மறைமுகமாக தாக்கிய சிவகார்த்திகேயன்

by Rohini |
dhanush (1)
X

dhanush (1)

Actor Sivakarthikeyan: இன்று கோலிவுட்டில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய பேச்சு பெரும் வைரலாகி வருகின்றது. சூரி நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவர காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தில் சூரியுடன் இணைந்து அன்னாபென் நடித்திருக்கிறார்.

வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் படும் பாடு, ஆணாதிக்கம் போன்றவற்றை பற்றி விளக்கும் திரைப்படமாக இந்த கொட்டுக்காளி திரைப்படம் தயாராகியிருக்கிறது. கொட்டுக்காளி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிவகார்த்திகேயன் படு மாஸாக வந்திருந்தார்.

இதையும் படிங்க: உலகநாயகன் கமலுக்காக மழை செய்த அந்த விஷயம்… வாயடைத்து போன படக்குழு…

இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ‘ நான் யாரையும் கண்டுபிடிச்சு, இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படியே சொல்லி சொல்லி பழக்கப்படுத்திவிட்டார்கள். அப்படி பட்ட ஆள் நான் இல்லை’ என கூறியிருக்கிறார்,

இதை பார்த்த ரசிகர்கள் ‘இது தனுஷைத்தான் மறைமுகமாக தாக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்’ என கூறி வருகிறார்கள். ஏனெனில் சிவகார்த்திகேயனுக்கு முதன் முதலில் மூணு படத்தின் மூலம் வாய்ப்பை கொடுத்ததே தனுஷ்தான். அந்தப் படத்தில் ஒரு இரண்டாவது நாயகனாக நடித்தார் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க: தல, தளபதி மாஸ் பண்றாங்களே! அஜித்துக்கு போட்டியா கெத்து காட்டிய விஜய்

அதிலிருந்தே சிவகார்த்திகேயனும் தனுஷும் எங்கு போனாலும் ஒன்றாகவே போவது, ஒன்றாகவே அமர்வது, ஜாலியாக அரட்டை அடிப்பது என மிக நெருக்கமாக பழகி வந்தார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்கெட் உயர இருவருக்கும் இடையே சின்ன விரிசல் ஏற்பட்டது. இதை ரசிகர்கள் தனுஷுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.

sivakar

sivakar

சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டதே தனுஷ்தான். அப்படிப்பட்டவரை இந்த மாதிரி ஒதுக்கலாமா என்று சிவகார்த்திகேயனுக்கு எதிராக கருத்துக்களை சோசியல் மீடியாவில் பரப்பினர். ஏன் ஒரு மேடையில் தனுஷே ‘ ஒரு நல்ல காமெடி ஸ்கிரிப்ட் இருந்தால் சொல் என ஒரு இயக்குனரிடம் ஒரு நடிகருக்காக கேட்டேன்’ என கூறியிருந்தார். அந்த நடிகர் வேறு யாருமில்லை. சிவகார்த்திகேயன் தான்.

இதையும் படிங்க: ரஜினியுடன் நடிச்சப்ப ஒன்னும் நடக்கலை… விஜயுடன் வேற மாதிரி ஆச்சு… ஓபனாக உடைத்த பிரபல நடிகை!..

இதை குறிப்பிட்டு கூட சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி ஆடியோ விழாவில் அப்படி பேசியிருக்கலாம் என்று கூறி வருகிறார்கள் .

Next Story