என்னது இளைய தளபதி சிவகார்த்திகேயனா? கொஞ்சம் கூட ஒட்டலயே - எல்லாம் ‘அயலான்’ கையிலதான் இருக்கு

siva
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் ஆங்கரிங்கில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தவர் அப்படியே வெள்ளித்திரைப் பக்கம் தலையை காட்டியதுதான். யாருமே எதிர்பாராத ஒரு திருப்பம் சிவகார்த்திகேயன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
மிகவும் கஷ்டமான சூழலில்தான் ஆங்கரிங் துறையை தேர்ந்தெடுத்தார் சிவகார்த்திகேயன். அப்படியே மக்கள் மத்தியில் ரீச்சாகி இன்று அனைவரும் மெய்சிலிர்த்து பார்க்கும் அளவுக்கு ஒரு வளர்ச்சியை எட்டியிருக்கிறார். தற்போது அயலான் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரஜினி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: சிவாஜியை காப்பி அடித்து ரஜினி நடித்த படம்!.. ஆனாலும் தனது ஸ்டைலில் அசத்திய சூப்பர்ஸ்டார்!..
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பற்றியும் அயலான் திரைப்படத்தை பற்றியும் எல்லா சேனல்களிலும் பல விவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு சிலர் இளைய தளபதி சிவகார்த்திகேயன் என்று சொல்லி ஷாக் கொடுத்ததோடு ஏன் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்லும் போது சிவகார்த்திகேயனை இளைய தளபதி என சொல்லக் கூடாதா? அடுத்த விஜய்ங்க அவர் என்று சொல்லி சமாளித்தனர்.
மேலும் அயலான் திரைப்படம் கிட்டத்தட்ட அவரின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாம். 6,7 வருஷத்திற்கு முன்னாடி எடுக்கப்பட்ட திரைப்படம். ஒரு சில இடங்களில் வேலைக்காரன் படத்தில் வரும் சிவகார்த்திகேயன் மாதிரி ஆங்காங்கே இந்தப் படத்தில் தெரிவதாகவும் கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில காலமாகவே தமிழ் சினிமாவில் இருக்கும் சாபக்கேடு என்னவெனில் படத்தின் ஹீரோ என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கும்.
இதையும் படிங்க: 10 நொடி விளம்பரத்திற்கு 4.50 லட்சமா? நடிக்க மறுத்த ‘விக்ரம்’ பட புண்ணியவான்ஸ் – ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவிங்க
அதே பாணிதான் இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாக தெரிகிறது. அடிப்படையில் ஒரு நல்ல குணம் கொண்ட விவசாயி. அவரிடம் ஒரு ஏலியன் வந்து சேர அந்த ஏலியனை பிடிக்கும் முயற்சியில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி உள்ளே இறங்க அவர்களிடம் இருந்து அந்த ஏலியனை சிவகார்த்திகேயன் எப்படி காப்பாற்றுவார் என்பதன் அடிப்படையில்தான் கதை அமைவதாக தெரிகிறது.
இதற்கிடையில் அயலான் திரைப்படத்தோடு தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியாவதால் கேப்டன் மில்லரை தாண்டி குடும்பங்களை கவரும் விததத்தில் அயலான் திரைப்படம் அமைய வேண்டும். அப்படி குடும்பங்களை தன் பக்கம் இழுத்துவிட்டால் அயலான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். அதன் பிறகு சிவகார்த்திகேயனை கொண்டாடவும் ஆரம்பித்துவிடுவார்கள் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.
இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் சூடேறுது!.. காஜி ஃபேன்ஸுக்கு ஃபுல் ட்ரீட் வைத்த ரித்திகா சிங்..