லியோவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!. டிரெண்டிங்கில் முதலிடம்!.. சிறப்பா செஞ்சிட்டீங்க!..

Sivakarthikeyan: லியோ பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே அந்த படம் தொடர்பான ஏதோ ஒரு ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வந்து கொண்டிருந்தது. கண்டிப்பாக தினமும் லியோ படம் தொடர்பான 2 ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகும். ஃபர்ஸ்ட் லுக் வீடியோ, ஃபர்ஸ்ட் சிங்கிள், 2வது சிங்கிள், 3வது சிங்கிள், டிரெய்லர், இசை வெளியீட்டு விழா என பல ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி முதலிடத்தில் இருந்து.

ஏனெனில், லியோ படம் தொடர்பான ஏதோ ஒரு விஷயத்தை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பேசியும், விவாதித்தும் வந்தனர். லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் போனபோதும் கூட விஜய் ரசிகர்கள் அரசுக்கு எதிராகவும் ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் செய்தனர்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜிடம் ரஜினி கேட்ட முதல் கேள்வி!.. அட இவ்வளவு நடந்திருக்கா?!..

இந்நிலையில்தான், நேற்று இசையமைப்பாளர் டி இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். சில மாதங்களுக்கு முன்பே அரசல் புரசலாக இதுபற்றி சில சினிமா பத்திரிக்கையாளர்கள் யுடியூப் சேனலில் பேசியிருந்த நிலையில் இமான் அதை நேற்று உறுதி செய்தார்.

இனிமேல் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் கூட அவருடன் இணையமாட்டேன் என சொல்லியிருந்தார். அதோடு, குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இதற்கு மேல் இதைப்பற்றி பேசமாட்டேன் எனவும் அவர் சொன்னதால் அவரின் விவாகரத்துக்கே சிவகார்த்திகேயன்தான் காரணமா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து டிவிட்டரில் பலரும் #Sivakarthikeyan என்கிற ஹேஷ்டேக்கில் இதை விவாதிக்க துவங்கிவிட்டனர். இன்று காலை முதல் #LeoFDFS #LeoBookingsUpdate #Thalapathy என பல ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஹேஷ்டேக் அது எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி டிரெண்ட்டிங்கில் முதலிடத்தை பிடித்துவிட்டது.

இதையும் படிங்க: கள்ள உறவு காரணமில்லை!.. விவாகரத்து பஞ்சாயத்து.. டி. இமான் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

 

Related Articles

Next Story