இதனால்தான் சால்வையை தூக்கி எறிந்தேன்!. விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவித்த சிவக்குமார்!...

நடிகர் சிவக்குமார் தனக்கு ஒருவர் அணிய வந்த சால்வையை தூக்கி எறிந்த சம்பவம் சமீபத்தில் வீடியோவாக வெளியாகி பலரின் கோபத்திற்கும் ஆளானது. வயதுக்கு மரியாதை கொடுத்து அதை அனுமதித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படி தூக்கி போடுவது சிவக்குமாருக்கு அழகல்ல என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
அதுவும் ‘மேடைக்கு மேடை தியானம், யோகா, மனக்கட்டுப்பாடு ஆகியவற்றை பற்றி பாடமெடுக்கும் சிவக்குமார் இப்படி நடந்து கொள்ளலாமா?’ என பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். சில வருடங்களுக்கு முன்பு அவரோடு செல்பி எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் செல்போனை தட்டிவிட்டார்.
இதையும் படிங்க: ஹாட்ரிக் பிளாப்!.. இப்படியே போனா மார்கெட் காலிதான்!.. சுதாரிப்பாரா ஜெயம் ரவி?!..
அந்த வீடியோ வைரலான பின் அதற்கு வருத்தம் தெரிவித்ததோடு அந்த வாலிபருக்கு புதிய செல்போனையும் வாங்கி கொடுத்தார். இப்போது சால்வையை அவர் தூக்கி எறியும் வீடியோவும் வைரலானது. இந்நிலையில், இது தொடர்பாக சிவக்குமார் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார்.
அந்த வீடியோவில் சால்வை அணிய வந்த அந்த முதியவரும் அவரின் அருகில் அமர்ந்திருக்க ‘இவன் வேறு யாருமல்ல. என் தம்பி. 50 வருடங்களாக எனக்கும் இவனுக்கும் நட்பு உண்டு’ என சொல்ல, அருகில் இருந்தவர் ‘அண்ணன் காரைக்குடிக்கு வந்தபோது நான்தான் வரவேற்றேன். எனக்கு திருமணம் செய்து வைத்ததே இவர்தான்.
இதையும் படிங்க: ஒருவழியா ரிலீஸ் தேதியை குறித்த ஷங்கர்!.. பிரம்மாண்டமாக வெளிவரும் இந்தியன் 2..
சம்பவம் நடந்த அன்று அவர் சாப்பிடவில்லை. எல்லோரும் பேசி இரவு 10 மணிக்கு கடைசியாக அவர் பேசினார். மிகவும் அசதியாக இருந்தார். அவருக்கு சால்வை அணிவது பிடிக்காது. என் மனைவியும் ‘அவருக்கு சால்வை பிடிக்காது. எடுத்து செல்லாதீர்கள்’ என சொன்னாள். ஆனால், நம் ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்’ என சொன்னேன்.
அவருக்கு சால்வை அணிந்தது என் தவறுதான்’ என அவர் சொல்ல ‘சால்வை அணிவித்தது அவர் தவறு எனில் பொது இடம் எனவும் பாராமல் அதை தூக்கி எறிந்தது என் தவறுதான். அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்’ என அந்த வீடியோவில் சிவக்குமார் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் ரிலீசுக்கு தேதி குறித்த வெங்கட்பிரபு!. ஆனா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு!.. ஐயோ பாவம்!..