Connect with us
goat

Cinema News

கோட் ரிலீசுக்கு தேதி குறித்த வெங்கட்பிரபு!. ஆனா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு!.. ஐயோ பாவம்!..

லியோ படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். வெங்கட்பிரபு இயக்கி வரும் இந்த படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் என பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே இது புதுமாதிரியான கதை என சொல்லப்படுகிறது.

மேலும், ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயை 20 வயது இளைஞாக வெங்கட்பிரபு காட்டப்போகிறார். இதுவே ரசிகர்களுக்கு பெரிய சர்ப்பரைசாக இருக்கப்போகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். பல வருடங்களுக்கு பின் விஜயின் படத்திற்கு யுவன்சங்கர்ர் ராஜா இசையமைப்பதால் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’னு எந்த நேரத்துல பேர வச்சாங்கேளோ? அடுத்த பிரச்சினை.. இது தீரவே தீராதே

இப்படத்தின் படப்பிடிப்பு பல வெளிநாடுகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் இறுதிக்காட்சியை இலங்கையில் எடுக்க திட்டமிட்டு பின்னர் அது ரத்தானது. எனவே, வேறு இடத்தை படக்குழு தேடி வருகிறது. வருகிற மார்ச் 1ம் தேதி சென்னையில் ஒரு பாடல் காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் இப்படத்தை ஆகஸ்டு 15ம் தேதி ரிலீஸ் செய்ய வெங்கட்பிரபு திட்டமிட்டிருக்கிறார். அன்று வியாழக்கிழமை வருகிறது. அடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு என வார இறுதிநாட்கள் வருவதால் நல்லா கல்லா கட்டலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிடுவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: அஜித் மச்சானுடன் ஷகீலாவுக்கு வந்த காதல்… திருமண நேரத்தில் நடந்த பிரேக்அப்… புதுக்கதையா இருக்கே?..

இது தமிழ்நாட்டுக்கு ஓகேதான் என்றாலும் வெளிநாடுகளில் சிக்கலாகும் என கணிக்கப்படுகிறது. ஏனெனில், பல ஐரோப்பிய நாடுகளில் அப்போது கோடை விடுமுறை வருகிறது. எனவே, அங்கு வசிக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு போய்விடுவார்களாம். அவர்களில் பெரும்பலானோர் இலங்கையில் வசிப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே, ஆகஸ்டு மாதம் கோட் படம் வெளியானால் அங்கு தியேட்டர்கள் காத்து வாங்கி வசூல் பாதிக்கும் என சொல்லப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top