சூர்யாவிற்கு கொஞ்சம் சொல்லி புரிய வையுங்க!.. மகன் செயலால் வேதனையடைந்த சிவக்குமார்!..
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக இவருக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே நடந்த அந்த விவாதத்தை பற்றி அறிந்திருப்போம்.
ஒரு உச்ச நடிகராக இருக்கும் சூர்யாவை இன்னும் அதே பழைய சூர்யாவாகவே நடத்தியதால் தான் இவ்ளோ பிரச்சினைக்கு காரணம் என்று கூறிவருகின்றனர். ஆரம்பத்தில் இருந்த சூர்யாவை யாராலும் மறந்திருக்க முடியாது. நடிக்கவும் தெரியாமல் டான்ஸ் கூட ஆடவும் தெரியாமல் ஒரு தத்தி நடிகராக தான் நுழைந்தார் சூர்யா.
தோல்விகளை கண்டு பயப்படாமல் கதைக்கு ஏற்ற வகையில் தன்னை வருத்திக் கொண்டு நடிக்கும் சூர்யாவாக வலம் வந்தார். அவரது கெரியரில் நந்தா எப்படி ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோ அதே வகையில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் சூர்யவின் வாழ்க்கையை திருப்பி போட்டது என்று சொல்லலாம்.
இதையும் படிங்க : கே.வி. ஆனந்தை வெளுத்து வாங்கிய ஷோபனா!.. அம்மணிக்கிட்ட போய் அப்படி சொல்லலாமா?..
அந்த படங்களுக்காக தன் கட்டு மஸ்தான உடம்பை காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கியடித்தார். சிக்ஸ் பேக் என்ற ஒரு யுத்தியை கையில் எடுத்து பிரமிப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தில் நடிக்க கமிட் ஆனார் சூர்யா.
அந்த படத்தின் பூஜை சமயத்தில் சிவக்குமாரும் கலந்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் கே.வி.ஆனந்திடம் ஒரு தந்தை என்ற முறையில் ‘சிக்ஸ் பேக் என்று சொல்லிக் கொண்டு தண்ணி கூட குடிக்க மாட்டேங்குறான், இதெல்லாம் தேவையா? ஏன் நான்லாம் அந்த காலத்துல நடிக்கலையா? அந்த படங்களாம் ஓடலயா? நீ தான் சொல்லி சூர்யாவுக்கு புரிய வைக்கனும்’ என்று ஆனந்திடம் புலம்பியிருக்கிறார் சிவக்குமார்.
இதையும் படிங்க : 27 வருடமாக நெ.1 இடத்தில் இருக்கும் ரஜினி.. சீண்டி பார்த்து சோர்ந்த ராஜமௌலி… என்ன நடந்தது?
உங்க சினிமா வேற, இப்ப உள்ள சினிமா வேற என்று சிவக்குமாரிடம் வாதாடாமல் சூர்யாவின் உடம்பில் அதிக அக்கறை காட்டிய சிவக்குமாரிடம் பதில் பேசமுடியாமல் சரி என்று மட்டும் சொல்லி சமாதானம் செய்தாராம் கே.வி. ஆனந்த்.