சிவக்குமார் மீது காதல் வையப்பட்ட நடிகை! கட்டிபிடிக்கும் சீனில் என்ன செய்தார் தெரியுமா?
திரை உலகில் ஒழுக்கமான நடிகரை பார்ப்பது அரிது. அதற்கு விதிவிலக்காக இருந்தவர் நடிகர் சிவகுமார். ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு இவரது வீட்டில் பயந்தார்களாம்.ஏனெனில் சினிமா பக்கம் போனால் தன் மகனின் பழக்கவழக்கங்கள் மாறிவிடுமோ என அஞ்சிய அவரது வீட்டார் முதலில் தயங்கி இருக்கிறார்கள். அதன்பின் அவரது உறவினர் ஒருவரின் உதவியோடு சென்னைக்கு வந்திருக்கிறார் சிவக்குமார்.
ஆவரேஜான நடிப்பு
இவரைப் பற்றி சில சுவாரசியமான தகவல்களை அரசியல் விமர்சகர் காந்தராஜ் ஒரு பேட்டியில் கூறினார். அதாவது நடிப்பு என்பது சிவக்குமாருக்கு ஆவரேஜ் தான் என்று கூறியிருக்கிறார். ஆனால் கடவுள் வேஷங்கள் இதுதான் சிவகுமாருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தும் என்றும் கூறினார்.
ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் இவர்களுக்கு முன்பே சிவக்குமார் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அவர்களைப் போல் அந்த ஒரு உயரத்தை அடையவில்லை. சொல்லப்போனால் சிவாஜி, எம்ஜிஆர் ,ஜெமினி கணேசன் இவர்களுக்கு அடுத்தபடியாக சிவக்குமார் ,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இவர்கள்தான் வரவேண்டியது.
ஆனால் சிவக்குமார் அவர் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை. ஆனால் அவருக்கு என்று ஒரு தனி நடிப்புத் திறமையும் உண்டு. அதனால் தான் என்னவோ 100 படங்களுக்கும் மேல் நடித்து மக்களின் ரசனைக்கு ஆளானார் சிவக்குமார்.
உடல் ரகசியம்
அடிப்படையில் ஓவியரான சிவக்குமார் பல நல்ல நல்ல ஓவியங்களை படைத்திருக்கிறார். தன் உடல் மீதும் அதிக அக்கறை கொண்டவர் .அதனால் தான் இன்று வரை யோகா, உடற்பயிற்சி இவைகளை கற்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். மேலும் அந்த காலத்தில் தாய்மார்கள் அனைவரும் பிள்ளைனு ஒரு பிறந்தா சிவக்குமார் மாதிரி பிறக்கனும் என்று சொல்வார்களாம். அந்த அளவுக்கு ஒழுக்கம் வாய்ந்தவராக இருந்திருக்கிறார் சிவக்குமார்.
இந்த நிலையில் சிவக்குமாரை பற்றிய ஒரு கிசுகிசுவை காந்தராஜ் கூறினார். அதாவது அந்த காலத்தில் ஏகப்பட்ட நடிகைகளுக்கு சிவக்குமார் மீது காதல் இருந்ததாம். இதை அவரே ஒரு சில மேடைகளில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் என்றும் காந்தராஜ் கூறினார். ஒரு சமயம் ஒரு படப்பிடிப்பு சமயத்தில் சிவக்குமார் மீது ஆசை கொண்ட ஒரு நடிகை கட்டிப்பிடிக்கும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாராம். சிவகுமாரும் அந்த நடிகையும் இறுக்கமாக கட்டி அணைக்கும் போது இயக்குனர் கட் கட் என்று சொல்லிவிட்டாராம்.
நடிகையின் ஏக்கம்
அதற்கு அந்த நடிகை இயக்குநரை பார்த்து "ஏன் சார் அதுக்குள்ள கட் சொல்லி விட்டீர்கள்?" என்று மிகவும் ஏக்கத்துடன் கேட்டதாக அந்த நேரத்தில் இந்த செய்தி மிகவும் வைரலாக பேசப்பட்டது என்றும் காந்தராஜ் கூறினார்.
இதையும் படிங்க : படப்பிடிப்பில் ரசிகர்களால் நொந்துப்போன அர்ஜூன்..! பக்க பலமாக நின்ற கவுண்டமணி…