அன்று செல்போன்!. இப்போது சால்வை!.. தூக்கி எறிந்த சிவக்குமார்.. இன்னமும் இவர் திருந்தலயே!...

by சிவா |   ( Updated:2024-02-26 06:16:57  )
sivakumar
X

தமிழ் சினிமாவில் இளமை மாறாத மார்க்கண்டேயனாக வலம் வருபவர் நடிகர் சிவக்குமார். 60களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர் 70,80களில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மினிமம் கேரண்டி உள்ள ஒரு ஹீரோவாக வலம் வந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

90களில் பல திரைப்படங்களிலும் குணச்சித்திர நடிகராக நடித்த சிவக்குமார் ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஒருபக்கம் அவரின் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டனர். அதிகாலை எழுதுவது, யோகா செய்வது, சீரான உணவு பயிற்சி, உடல் பயிற்சி, இயற்கை உணவு ஆகியவை பற்றி பல மேடைகளிலும் மக்களுக்கு அறிவுரை சொல்லி வருபவர் இவர்.

இதையும் படிங்க: கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம்!.. அப்பவே மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..

அதேநேரம், சில நேரம் அவர் சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. சில வருடங்களுக்கு முன் அவருடன் செல்பி எடுக்க முயன்ற் வாலிபரின் கையில் இருந்த செல்போனை தட்டிவிட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்ய சூர்யாவே இதற்கு வருத்தம் தெரிவிக்கும் நிலையும் ஏற்பட்டதோடு அந்த வாலிபருக்கு புது செல்போனையும் சிவக்குமார் வாங்கி கொடுத்தார்.

பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் அதே போல ஒரு சர்ச்சையில் சிவக்குமார் சிக்கி இருக்கிறார். காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிவக்குமார் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் அப்படி கேட்பார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. அழுதே விட்டேன்.. உருகும் சிவக்குமார்….

விழா முடிந்து கீழே வந்தவருக்கு வயதான ரசிகர் ஒருவர் அவருக்கு போர்த்துவதற்காக சால்வையை கையில் வைத்தபடி நின்றிருந்தார். அதைப்பார்த்து கோபப்பட்ட சிவக்குமார் அதை அவரின் கையிலிருந்து பிடிங்கி தூக்கி கீழே எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் அந்த ரசிகரின் முகம் வாடிப்போனது.

sivakumar

யோகா, தியானம் என மனதை கட்டுக்குள் வைத்திருக்கு சிவக்குமார் இப்படி நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது. அப்போ செல்போன். இப்ப சால்வை. இன்னமும் இவர் மாறவே இல்லை. இதுபோன்ற நபர்களை சிறப்பு விருந்தினராக ஏன் அழைக்கிறார்கள்?’ என நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்

https://www.instagram.com/reel/C3zDL0kglEZ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Image and video credits to Polimer News...

Next Story