நல்ல வேளை கல்யாணம் ஆகல! அந்த விஷயத்தை சமாளிக்க முடியுமா? இப்படி சொல்லிட்டாரே எஸ்.ஜே. சூர்யா

by Rohini |
sj surya
X

sj surya

தமிழ் சினிமாவில் இப்போது ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நடிகராக வேண்டும் என்றுதான் சினிமாவில் நுழைந்திருக்கிறார். ஆனால் சினிமா முதலில் இவரை இயக்குனராக்கியது. இருந்தாலும் இயக்கிய இரண்டு படங்களுமே காலங்காலமாக நின்னு பேசக் கூடிய படங்களாக அமைந்தன. அதுவும் அஜித் விஜய் கெரியரில் ஒரு டிரெண்ட் செட்டராக அந்தப் படங்கள் மாறியது.

அதன் பிறகு எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் படங்களின் கதைகள் மக்களை அந்தளவு ஈர்க்கவில்லை. சொல்லப்போனால் விமர்சனங்களுக்கு ஆளான படங்களாக மாறியது. அதனால் சினிமாவில் சில காலம் அவருக்கு ஒரு கேப் ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லனாக அவதரித்தார் எஸ்.ஜே. சூர்யா.

அதுவும் மெர்சல் படத்தில் ஒரு டெரரான வில்லனாக நடித்து ஒட்டுமொத்த சினிமாவையும் தன் பக்கம் திருப்பினார். அவ்வளவுதான் அவரது காட்டில் மழை என்பது போல எடுக்கும் எல்லா படங்களிலும் இவரே வில்லன் ஆனார். நடிப்பு அரக்கன் என்ற பெயரையும் தனதாக்கிக் கொண்டார்.

இப்போது தமிழில் வெளியாகும் எந்தப் படங்களாகட்டும். அதில் எஸ்.ஜே.சூர்யா இல்லாத எந்த படத்தையும் நாம் பார்க்க முடியாது. அந்தளவுக்கு கிடைக்கிற எல்லா படங்களிலும் கமிட் ஆகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறார். இப்போது ராயன் திரைப்படத்திலும் தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

இந்தியன் 2 படத்திலும் அவர்தான் வில்லன். கேம் ஜேஞ்சர் படத்திலும் இவர்தான் வில்லன். இன்னும் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களிலும் இவரைத்தான் கமிட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் எப்படி நேரத்தை மேனேஜ் செய்கிறீர்கள் என அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்திருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

அதாவது ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் தூங்குகிறாராம். மற்ற நேரங்களில் சினிமா சினிமா என ஓடிக் கொண்டிருப்பதாக கூறினார். மேலும் இப்படி இருக்கிறதால் ஃபிஸிக்கல் பக்கம் அந்தளவுக்கு கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் மனதளவில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஏனெனில் கல்யாணம் ஆகல.திருமணம் மட்டும் நடந்திருந்தால் மனதளவில் ஒரு பாரம் இருந்து கொண்டிருக்கும்.இப்படி சினிமாவே கதினு இருக்க முடியுமா? என்ற வகையில் கூறினார். அதற்காக திருமணம் ஆனவர்கள் அனைவரும் கஷ்டப்படுகிறார் என்று சொல்லவில்லை என்றும் கூறினார்.

Next Story