Soori Vishnu Vishal: பெர்லினில் மாஸ் காட்டி வருகிறார் சூரி. சர்வதேச திரைப்பட விழாவில் அவர் நடித்த கொட்டிக்காளி திரைப்படமும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் வெளியிடப்பட்டு அங்குள்ளவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் சூரி.
எங்கு போனாலும் சூரியின் முகம் தெரிவதால் யார் இந்த நடிகர்? ஒரு வேளை இவர்தான் இந்தியாவில் பேர் சொல்லும் அளவுக்கு உயர்ந்த ஒரு நடிகராக இருப்பாரோ என்ற அளவுக்கு அங்குள்ளவர்கள் அதியசித்து பார்க்கிறார்களாம். அதற்கேற்றாற்போல சூரியின் கோட் சூட்டில் ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு படு ஸ்டைலாக போஸ் கொடுத்தும் வருகிறார்.
இதையும் படிங்க: பிரதீப்புக்காக பொங்கிய ஐசு நண்பர்கள்… ரெட் கார்ட் கொடுத்தும் அசிங்கப்படுத்திட்டாங்களே…
இந்த நிலையில் லால் சலாம் பட ப்ரோமோஷன் நேரத்தில் விஷ்ணு விஷாலிடம் சூரியை பற்றி கேட்டதற்கு மிகவும் இன்முகத்துடன் நானும் சூரியும் விரைவில் சேர்ந்து சந்திப்போம் என்றும் இரண்டு பேரும் பேசி விட்டோம் என்றும் விஷ்ணு விஷால் கூறியிருந்தார்.
அதற்கு பின்னணியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு நிலப்பிரச்சினையில் சூரியை விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் ஏமாற்றிவிட்டதாக கூறிதான் இந்த பிரச்சினையே பூகம்பமாக கிளம்பியது. ஆவணங்களில் ஏதோ முறை கேடு செய்து சூரியை ஏமாற்றியதாக முன்னதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: 3 படத்துக்கு சம்பளம் என்னாச்சு? கமலை நம்பி கெரியரை தியாகம் செய்த நடிகை – உண்மையிலேயே கெத்துதான்
இதனாலேயே பல வருடங்கள் சூரியும் விஷ்ணு விஷாலும் சேர்ந்து நடிக்காமல் இருந்தன. இதில் விஷ்ணு விஷால் தரப்பில் சூரியிடம் இருந்து சமாதான தூது சென்றிருக்கிறது. இழப்பீடாக சில கணிசமான தொகையை கொடுப்பதாகவும் கேஸ் எல்லாவற்றையும் வாபஸ் வாங்கிவிடலாம் என்றும் சூரிக்கு சமாதான அழைப்பிதழ் சென்றிருக்கிறதாம்.
சூரியும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் திரையில் வெற்றிக் கூட்டணியாக வலம் வந்த சூரியும் விஷ்ணு விஷாலும் மறுபடியும் சேர்ந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் சுமார் 7 படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 75 கோடி கடனை தயாரிப்பாளர் தலையில் கட்டிய எஸ்.கே. ஐயோ பாவம் மனுஷன்!…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…