75 கோடி கடனை தயாரிப்பாளர் தலையில் கட்டிய எஸ்.கே. ஐயோ பாவம் மனுஷன்!...

விஜய் டிவியில் ஆங்கராக சில வருடங்கள் வேலை செய்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் நடிக்க துவங்கி டேக் ஆப் ஆனார். சில படங்களில் நடித்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்று ஓவர் நைட்டில் சிவகார்த்திகேயனை பெரிய ஹீரோவாக மாற்றியது.

தனது படங்கள் பல கோடிகளை வசூல் செய்ததால் நாம் சொந்தமாகவே படத்தை எடுத்தால் என்ன என்கிற ஆசை சிவகார்த்திகேயனுக்கு வந்தது. அப்போதுதான் அவருக்கு ஆர்.டி.ராஜா என்பவர் கிடைத்தார். அவரை பினாமியாக வைத்தார். சிவகார்த்திகேயனை ஒரு ஹீரோவாக, ஸ்டாராக ரசிகர்களின் மனதில் பதிய வைக்க கோடிக்கணக்கில் செலவு செய்தார் ராஜா.

இதையும் படிங்க: வாடிவாசலை ட்ராப் செஞ்சிடலாமா? தயாரிப்பாளரிடம் கேட்ட வெற்றிமாறன்.. திடீரென கிளம்பிய புது ஐடியா…

ஆர்.டி.ராஜாவை வைத்து சிவகார்த்திகேயன் எடுத்த ரெமோ, சீமத்துரை உள்ளிட்ட சில படங்கள் ஓடவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் பெரிய ஸ்டார் என்பது போல ஒரு பிம்பமும் உருவாக்கப்பட்டது. தோல்விப்படங்களில் 75 கோடி வரை கடன் ஏற்பட்டது. ஆர்.டி.ராஜா உங்களுடன் இருந்தால் உங்களை காலி செய்துவிடுவார் என சிவகார்த்திகேயனின் நலம் விரும்பிகள் சொல்ல அவரை கழட்டிவிட்டார்.

ஆனால், 75 கோடி கடன் அப்படியே நின்றது. ஒவ்வொரு படமும் வெளியாகும்போதும் இந்த கடன்களை கேட்டு பலரும் பிரச்சனை கொடுத்தனர். அதை தன் கையை விட்டு கொடுக்க விருப்பமில்லாத சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷை அழைத்து உங்களுக்கு 3 படங்கள் நடித்து கொடுக்கிறேன் என சொன்னார்.

இதையும் படிங்க: வடிவேலு மன்னிப்பு கேட்கனும்! குற்ற உணர்வோடவே வாழ வேண்டியதுதான்.. நச்சுனு சொன்ன நடிகர்

அவரும் ஒத்துக்கொண்டார். ஆனால், அப்படி தயாரித்த முதல் படமான் ஹீரோ ஓடவில்லை. இப்போது வெளிவந்த அயலான் படமும் பெரிய வெற்றி இல்லை. ஆனால், சிவகார்த்திகேயன் கடனிலிருந்து மீண்டுவிட்டார். 2 படங்கள் சம்பளம் இல்லாமல் நடித்தவர் மேலும் 35 கோடியை கொடுத்துவிட்டு கடனிலிருந்து மீண்டுள்ளார். ஆனால், தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ் நஷ்டமைடைந்திருக்கிறார். இந்த தகவலை வலைப்பேச்சி பிஸ்மி ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.

இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே 100 கோடி அளவில் கடனை பார்த்துவிட்டதால் இனிமேல் சொந்தமாக படத்தை எடுக்கமாட்டார் என்றே நம்பப்படுகிறது.

 

Related Articles

Next Story