விடுதலை படப்பிடிப்பில் தினமும் தேடி வந்த பாட்டி!.. வீடு தேடிப்போய் அசிங்கப்பட்ட சூரி!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தும் பல சமூகம் சார்ந்த செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவாவுடன் இணைந்து சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.அதனை தொடர்ந்து சுதா கொங்கராவுடன் ஒரு புதிய படத்திலும் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் தன்னை சூர்யா என நினைத்து என்னை ஒரு பாட்டிமா அவமானப் படுத்தியதை நடிகர் சூரி நேற்று நடந்த விடுதலை பட விழாவில் பேசினார். விடுதலை படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சூரியை பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு பாட்டி தினமும் வந்து போகுமாம். ஆனால் சூரியை பார்க்கவே முடியவில்லையாம்.
இதை அங்கு இருந்த கேமிரா மேன்கள் சூரியிடம் சொல்ல ‘ தயவு செய்து வீடு அங்க தான் இருக்கு, நீங்களே போய் பார்த்து ஆசிர்வாதமும் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று அந்த டெக்னிசியன்ஸ் சொல்லி சூரியும் தனது உதவியாளர்களை அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். வீட்டிற்குள் பாட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்ததாம். அப்போது வெளியில் இருந்து ‘அப்பத்தா நான் சூரி வந்திருக்கிறேன்’ என்று சூரி சொன்னதும்,
சாப்பிட்டதை அப்படியே போட்டுவிட்டு எச்சில் கையோடு வந்து அணைத்துக் கொண்டதாம் அந்த பாட்டி. உடனே அந்த பாட்டி ‘என்ன அப்பு கறுத்து போயிட்ட?’ என்று கேட்க அதற்கு சூரி ‘இது மேக்கப் அப்பத்தா’ என்று சொல்லியிருக்கிறார்.
‘உங்க அப்பா நல்லா இருக்காரா’ என்று கேட்க இவரும் நல்லா இருக்காரு என்றே சொல்லியிருக்கிறார். அதனை அடுத்து அந்த பாட்டி ‘உங்க அப்பா படத்தை எல்லாம் பார்த்திருக்கிறேன், என்னம்மா நடிக்கிறாரு? அதுவும் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தை எத்தனை தடவ பார்த்திருக்கிறேன் தெரியுமா? ஆமா உனக்கு தம்பி இருக்கான்ல? அவனும் நடிக்கான்ல?’ என்று கேட்டதும் சூரிக்கு ஒரே ஷாக்.
இதையும் படிங்க : 40 வருஷ நண்பர்.. கண்டிப்பா உதவி செய்வாரு!. ‘பிதாமகன்’ தயாரிப்பாளரின் அலறலை கேட்டு ஓடி வந்து உதவிய ரஜினி..
உடனே அந்தப் பாட்டியிடம் ‘என்ன அப்பத்தா சொல்ற? நான் யாருனு தெரியுமா?’ என்று கேட்டதும் ‘ நீ சிவக்குமார் மகன் தானே?’ என்று சொல்லியிருக்கு. அவ்ளோ தான் இதைக் கேட்டதும் சூரியுடன் வந்த உதவியாளர்கள் ஓடி விட்டார்களாம். அதன்பிறகு தான் யார் என்பதை சொல்ல அந்த அப்பத்தா வீட்டுக்குள்ள போயிருச்சாம். இது சத்தியமான உண்மை என்று அந்த விழாவில் சூரி கூறினார்.