Categories: Cinema News latest news

மாஸ் ஹிட் திரைப்படங்களை மிஸ் செய்து மொக்கையான ஸ்ரீகாந்த்… இதெல்லாம் காஸ்ட்லி மிஸ்ல…

Srikanth: தமிழ் சினிமாவின் சில நடிகர்கள் முதல் படமே ஹிட் கொடுத்து விடுவார்கள். அடுத்தடுத்த படங்களை சரியாக தேர்வு செய்ய முடியாமல் மொத்த கேரியரையும் தொலைத்துவிடுவார்கள். அதிலும் அவர்கள் மிஸ் செய்த படங்களை கேட்கும் போது கொஞ்சம் யோசிச்சு இருக்கலாமே எனத் தோன்றும்.

அப்படி ஒரு பலே லிஸ்ட்டை ஸ்ரீகாந்த் கையில் இருக்கிறது. இயக்குனர் சசி இயக்கத்தில் ரோஜா கூட்டம் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படமே செம வரவேற்பு கிடைத்தது. தொடர்ச்சியாக ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என பல ஹிட் படங்களில் நடித்தார். இதனால் இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருந்தனர்.

Also Read

இதையும் படிங்க: இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன்!.. அடம்பிடித்த கார்த்திக்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!..

கடைசியாக இவர் கேரியரில் விஜயின் நண்பன் படம் தான் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து சரியான திரைப்படங்களும் இல்லாமல் வெற்றியும் இல்லாமல் தவித்து வருகிறார் ஸ்ரீகாந்த். ஆனால் இவருக்கு கிடைத்த அருமையான திரைப்படங்களை மிஸ் செய்தது தான் இவரின் மிகப்பெரிய தவறாக இருக்கிறது.

இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசி இருக்கும் ஸ்ரீகாந்த், நான் நிறைய படங்களை மிஸ் செய்து இருக்கேன். அது எல்லாமே சூப்பர்ஹிட் தான். அந்த கதையை தெரிந்து சரியாக போகாது என நான் நினைத்து பண்ணாமல் இல்லை. சூழ்நிலையால் அந்த படத்தினை என்னால் செய்ய முடியாமல் போனது என்றார்.

இதையும் படிங்க: ஒரு நாள்ல என்னய்யா எடுக்க போறீங்க? பின்னாளில் ஹிட்டடித்த அந்த சீன்.. விஜய்க்காக இறங்கி வந்த நடிகர்

மேலும், அஜித்துக்கு பின்னர் நான் கடவுள் திரைப்படம் தன்னிடம் தான் வந்தது. ஆனால் அதையும் தன்னால் செய்ய முடியாமல் போனது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.  இதைக் கேட்ட ரசிகர்கள் இப்படியே எல்லாத்தையும் விட்டா கேரியரை மொத்தமா விட்டீங்க எனவும் கலாய்த்துவருகின்றனர்.

Published by
Akhilan