ஒரு நாள்ல என்னய்யா எடுக்க போறீங்க? பின்னாளில் ஹிட்டடித்த அந்த சீன்.. விஜய்க்காக இறங்கி வந்த நடிகர்

Actor Vijay: இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் விஜய். இதன் விளைவுதான் அடுத்ததாக அரசியல் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார். நடித்தது போதும். இனிமேல் மக்களுக்கு சேவை செய்வதே தன் கடமை என எண்ணிய விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

அரசியலில் முழுவதுமாக இறங்கிய பிறகுதான் விஜய்க்கு ஏகப்பட்ட சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. யாரிடமும் அதிகமாக பேசாத விஜய் இனிமேல் வாய் திறக்கத்தான் வேண்டும். இல்லை. என்னுடைய சுபாவமே இப்படித்தான் என இருந்தால் மீண்டும் சினிமா பக்கம் வந்துவிட வேண்டியதுதான்.

இதையும் படிங்க: இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன்!.. அடம்பிடித்த கார்த்திக்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!..

அநேக பேர் இப்படி இருக்கும் விஜய் எப்படி அரசியலுக்கு செட்டாவாரா? என்றுதான் கேட்டு வருகிறார்கள். இவருடைய அரசியல் எண்ணம் தலைவா படத்தின் போதே தோன்றி விட்டது என்று கூறலாம். அடிப்பட்ட பாம்புக்கு தெரியும் அதன் வலி என்று சொல்வார்கள்.

அதை போலத்தான் ஏகப்பட்ட அடிகளை அரசியல் தலைவர்கள் மூலமாக விஜய் வாங்கியிருக்கிறார். அதை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும் என்று கூட நினைத்து அரசியலுக்கு வந்திருக்கலாம். இந்த நிலையில் விஜய் படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சிவக்குமார்! சரியான அட்வைஸை கொடுத்து ஆஃப் செய்த தயாரிப்பாளர்

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழன். அந்தப் படத்தில் விஜய் வக்கீலாக நடித்திருப்பார். அவருக்கு சீனியர் வக்கீலாக டெல்லி கணேஷ் நடித்திருப்பார். ஆனால் முதலில் டெல்லி கணேஷுக்கு பதிலாக வேறு ஒரு நடிகர்தான் நடித்திருந்தாராம். ஆனால் அது திருப்திகரமாக இல்லையாம்.

உடனே விஜய் இந்த ரோலில் டெல்லி கணேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என டெல்லி கணேஷை அணுகியிருக்கிறார்கள். ஒரு நாள் கால்ஷீட்தான் என்று சொல்லி அழைத்திருக்கிறார்கள். அதென்னய்யா ஒரு நாள் வொர்க்? என்று முதலில் டெல்லி கணேஷ் தயங்க பின் விஜய்க்காக அந்த கேரக்டரில் நடித்துக் கொடுத்தாராம். அதுவே பின்னாளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீனாக மாறியது. சிகரெட் காமெடியை இன்றுவரை மறக்க முடியாது.

இதையும் படிங்க: இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி…அரசியல் கட்சி தலைவராக விஜய் போட்ட முதல் ட்வீட்!…

 

Related Articles

Next Story