போடு மொட்டையை… ஸ்ரீகாந்தைப் பாடாய்படுத்திய தயாரிப்பாளர்… ஏன்னு தெரியுமா?

by sankaran v |
srikanth
X

srikanth

தயாரிப்பாளர்களால் நடிகர்கள் கஷ்டப்படுறாங்களா என்ற கேள்விக்குப் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க.

பிரபல முன்னாள் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இவர் ஒரு இடியை பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் தலையில் இறக்கினார். அதேவேளையில் அவர்தான் அறிமுகப்படுத்தியும் இருக்கிறார். ஆஸ்கார்பிலிம்ஸ் ரவிச்சந்திரனோட குணமே யாரும் நல்லாருக்கக்கூடாது என்பதுதான்.

இவர் ரோஜாக்கூட்டம் படம் தவிர வேறு ஒரு 2 படத்துக்கும் ஸ்ரீகாந்தோடு அக்ரிமெண்ட் போட்டு வச்சிருக்காரு. ரோஜாக்கூட்டம் படத்துக்குப் பிறகு ஸ்ரீகாந்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏழெட்டு தயாரிப்பாளர்கள் அவரிடம் வந்து கால்ஷீட் கேட்குறாங்க. தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு இது ஆச்சரியத்தைத் தந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அவர் போன் போட்டு உடனடியாக ஸ்ரீகாந்தை வரச் சொல்கிறார். அவரும் பெரும் எதிர்பார்ப்புடன் அரக்கபறக்க ஓடி வருகிறார். அப்புறம் அவர் கூலாகச் சொல்கிறார். 'பெரிய சலூன்ல போய் மொட்டை போட்டுட்டு வா'ன்னு சொல்கிறார். 'ஏன் சார்?'னு கேள்வி கேட்குறார் ஸ்ரீகாந்த். 'படம் நடிக்கும்போது ஏன் என்னன்னா கேட்ட… போய் மொட்டை போட்டுட்டு வா'ன்னு சொல்ல ஸ்ரீகாந்துக்கு கால், கை எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

'அடுத்த படம் ஒண்ணு நாம பண்ணனும். ஞாபகம் இருக்கா?'ன்னு கேட்குறார். 'ஆமா சார். அதுக்கான கேரக்டரா? மொட்டை போடணுமா?'ன்னு கேட்டுள்ளார். 'இல்ல 6 மாசத்துக்குள்ள முடி வளர்ந்துடும். அப்புறம் நாம படம் எடுக்கலாம்'னு சொல்ல ஸ்ரீகாந்த் வேறு வழியில்லாமல் அதை அப்பாவிடம் எல்லாம் சொல்கிறார்.

அப்புறம் அவர் அப்பா வந்து ரவிச்சந்திரனிடம் பேசியுள்ளார். 'என் பையனோட வாழ்க்கையே போயிடும்'னு சொல்ல, 'சரி சரி பொழைச்சிப் போ'ன்னு அனுப்பி விட்டாராம். ரவிச்சந்திரனைப் பொருத்தவரை நாம வளர்த்த பையன். இன்னொருத்தர் மூலமா அதாவது பழைய ஆளான ஆஸ்கார் மூவீஸான எங்களைப் படம் எடுக்க விடாமச் செய்தார்.

நாங்க படம் எடுத்து அது மூலமா ஸ்ரீகாந்த் பாப்புலராகி விட்டா அந்தப் பேருதான் வெளியே தெரியும். அதனால நம்மளை படம் எடுக்க விடாமச் செய்தார். அந்த எண்ணம் அவருக்கு ஏன் வந்ததுன்னு தெரியல. அதனால அவர் சூழ்ச்சியால தான் அப்படி செய்தார். நல்லது செஞ்சா கர்மா அவரைக் காப்பாத்தும்;. தப்புத் தப்பா வாழ்ந்தா பெரிய பெரிய பாறாங்கல் தலையில விழும். அந்த நிலைமையில தான் இப்ப அவர் இருக்கிறார் என்கிறார் பாலாஜி பிரபு.

Next Story