விஜயை பத்தி கேள்விப்பட்டது பொய்! பத்துக்கு பத்து ரூம்ல? உயிர் நண்பனா இப்படி சொல்றது?

Published on: June 24, 2024
vijaynew
---Advertisement---

Actor Vijay: ஒருவரைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் அவருடைய நெருங்கிய நண்பரிடம் கேட்டுப்பார் என்று சொல்வார்கள். அதைப்போல சமீபத்தில் நடிகர் விஜய் பற்றி அவருடைய உயிர் நண்பனான ஸ்ரீகாந்த் ஒரு மேடையில் சில தகவல்களை கூறி இருக்கிறார். ஸ்ரீகாந்த் பல படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக சில படங்களில் வில்லனாக துணை நடிகராக நடித்திருக்கிறார்.

விஜயை சேர்த்து மொத்தம் ஐந்து பேர் அவருடைய நண்பர்கள். எங்கு போனாலும் இவர்கள் ஐந்து பேரும் தான் செல்வார்கள்.  அந்த அளவுக்கு இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதில் இன்னொருவர் நமக்கு தெரிந்த சீரியல் நடிகர் சஞ்சீவ் .விஜயுடன் சேர்ந்து சஞ்சீவ் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் ஒரு நல்ல மகனாக நல்ல தந்தையாக நல்ல கணவனாக நல்ல தகப்பனாக நல்ல நண்பனாக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: அந்தப் படத்தை பார்த்ததுக்கு ஒரு லட்சமா? விஜய் சேதுபதி சொன்ன சுவாரஸ்யதகவல்

அடுத்ததாக ஒரு நல்ல தலைவனாகவும் இருப்பார் என ஸ்ரீகாந்த் அந்த மேடையில் கூறினார். இந்த பிறந்தநாள் அவருக்கு ஒரு ஸ்பெஷல் பிறந்தநாள். 1993 ஆம் ஆண்டு விஜயின் 18 வது பிறந்த நாளை பத்துக்கு பத்து அறையில் நான், விஜய், சஞ்சீவ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினோம். அப்போது விஜயிடம் நான் இதே மாதிரி உன்னுடைய ஒரு பிறந்தநாள் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் நேரம் வரும் என்று நான் கூறினேன்.

அது போல இப்போது நடந்திருக்கிறது. இங்கு மற்றவர்கள் கூறும்போது சொன்னார்கள் விஜய் இப்போது 200 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று .ஆனால் நான் சொல்கிறேன் அஃபிசியலாக விஜய் அடுத்த படத்திற்கு 250 கோடி சம்பளம் வாங்குகிறார். இது உண்மையிலும் உண்மை. ஆனால் இவ்வளவு கோடிகளை விட்டுக் கொடுத்து அரசியலுக்கு வருகிறார் என்றால் அதற்கு காரணம் மக்களாகிய நீங்கள். உங்கள் நலனுக்காக அவருடைய செல்வாக்கை எல்லாம் விட்டுவிட்டு உங்கள் நலனுக்காக அரசியலுக்கு வருகிறார். அதனால் அவரை நீங்கள் கொண்டாட வேண்டும் என அந்த மேடையில் ஸ்ரீகாந்த் கூறினார்.

இதையும் படிங்க: ஒரே மாதிரியான காஸ்ட்யூம்.. மேக்கப்! ட்வின்ஸ் கூட தோத்துடுவாங்க! திடீரென மீட்டிங்கை போட்ட நயன் – நஸ்ரியா

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.