Srikanth: உன்னாலதான் எனக்கு டைம் வேஸ்ட்?!... விஜயிடம் திட்டு வாங்கிய ஸ்ரீகாந்த்...
நண்பன் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ஸ்ரீகாந்த் விஜய் இடம் திட்டு வாங்கியதாக கூறியிருக்கின்றார்.
நடிகர் ஸ்ரீகாந்த்: ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், கனா கண்டேன், பம்பரக்கண்ணாலே, துரோகி, நண்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு திடீரென்று தோல்வி மேல் தோல்வி வந்தது.
படத் தோல்விகள்: சினிமாவைப் பொறுத்தவரை தொடர் தோல்விகளை கொடுத்தால் அப்படியே ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள். அப்படி ஒரு நடிகராக தான் ஸ்ரீகாந்த் தற்போது இருந்து வருகின்றார். இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றார். தற்போது ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: OTT Release: தீபாவளி ரிலீஸ் படங்களெல்லாம் எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?!.. வாங்க பார்ப்போம்!…
நண்பன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் நண்பன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மூன்று நண்பர்கள் சேர்ந்து படத்தில் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ரசிக்கும் படியாகவும், நம்மை கல்லூரி பருவத்திற்கு அழைத்துச் செல்வது போன்று இருக்கும். இந்த திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கமிட்டானது குறித்தும் அப்படத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் குறித்தும் பகிர்ந்து இருக்கின்றார்.
இயக்குனர் சங்கரின் அழைப்பு: நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த பூ மற்றும் துரோகி திரைப்படத்தை பார்த்து விட்டு தான் இயக்குனர் சங்கர் ஸ்ரீகாந்த்தை நண்பன் திரைப்படத்தில் கமிட் செய்தாராம். துரோகி திரைப்படத்தின் லுக்கை பார்த்துவிட்டு தனக்கு இது போன்று லுக் வேண்டும். வித்தியாசம் காட்ட வேண்டும் என்று ஸ்ரீகாந்திடம் கேட்டுக் கொண்டாராம் ஷங்கர்.
அதன்படி ஒரு மாதம் 5 கிலோ உடல் எடையை உயர்த்த வேண்டும். அதன் பிறகு 5 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டும். இப்படித்தான் படம் முழுவதும் நடித்ததாக அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார். மேலும் அந்த திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை தன்னால் மறக்கவே முடியாது எனவும் அவர் பகிர்ந்திருந்தார்.
நடிகர் விஜயிடம் திட்டு: இயக்குனர் சங்கர் படத்தில் கல்லூரி கதாபாத்திரம் மற்றும் தனது நண்பனை தேடும் சற்று முதிர்ந்த கதாபாத்திரம் என்று இரண்டு சீன்களையும் சரிசமமாக எடுத்து இருப்பார். இதனால் படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமானது. ஏனென்றால் கல்லூரி கதாபாத்திரத்திற்கு கிளீன் ஷேவ் செய்து கொண்டு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா அட்வான்ஸ் புக்கிங்குக்கு வந்த சிக்கல்!. எப்பா 2 ஆயிரம் கோடி பாத்து பண்ணுங்கப்பா!..
அடுத்ததாக நடிகர் விஜயை தேடி செல்லும் கதாபாத்திரத்திற்கு சற்று முடி அதிகமாக வளர்த்து தாடி எல்லாம் வைத்து இருக்க வேண்டும். அதிலும் எனக்கெல்லாம் 25 நாட்களாகும் என்னுடைய தாடி வளர்வதற்கு, நடிகர் விஜய் எனக்காக 25 நாள் காத்திருப்பார். ஒரு சமயம் எனக்கு போன் செய்து உன்னால் என்னுடைய டைம் எல்லாம் வேஸ்ட்டா போகுது என்று திட்டியதாக சிரித்துக் கொண்டே அந்த பேட்டியில் கூறியிருந்தார் ஸ்ரீகாந்த்.