சினிமாவுல வர அஜித்தும் ஒரு காரணம்! ஸ்ரீகாந்த் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா?

by Rohini |
srikanth
X

srikanth

Ajith Srikanth: ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படத்தில் சாக்லேட் பாய் என அனைவராலும் கொண்டாடப்பட்டவர் .குறிப்பாக பெண்களை கவர்ந்த ஒரு ஹீரோவாக முதல் படத்திலேயே தன்னை பிரதிபலித்தார். ஆனால் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றால் அந்த ஒரு படத்தை தான் சொல்லலாம். அதன் பிறகு அவர் நடித்த எந்த ஒரு படமும் பெரிதாக பேசப்படவில்லை .

இருந்தாலும் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்ற நடிகராக சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். சமீப காலமாக படங்கள் வாய்ப்பு இல்லாமல் எங்கு இருக்கிறார் என்று தேடும் அளவிற்கு அவரின் நிலைமை இப்போது மாறிவிட்டது. இந்த நிலையில் தனியார் youtube சேனலுக்கு தற்போது பேட்டி கொடுத்து வருகிறார் ஸ்ரீகாந்த். அந்த பேட்டியில் சினிமாவில் எப்படி நுழைந்தேன்? அந்த ஆசை எப்படி வந்தது? என்றெல்லாம் அவருடைய அனுபவங்களை பற்றி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:‘காஞ்சனா 4’ல் இப்படி ஒரு கேரக்டரா? மாற்றம் சேவையால் மாறிப் போன பாலாவின் கெரியர்

அதாவது முதன் முதலில் மரபுக் கவிதைகள் மற்றும் ஜன்னல் என்ற சீரியலில் தான் அவர் நடிக்க ஆரம்பித்தாராம். அதுதான் அவருடைய சினிமா அறிமுகம் என கூறினார். அவருடைய அப்பா நாடக நடிகர். அதனால் அந்த ஜீன் எனக்கும் வந்திருக்கும் என கூறினார். சினிமாவில் ஸ்ரீகாந்த் பிரமித்து பார்த்த நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் ரஜினி என கூறினார்.

மேலும் கல்லூரி பள்ளி படிப்பின் போது தன்னை அனைவரும் பார்க்க வேண்டும். அனைவருடைய அட்டென்ஷன் என் மீது பட வேண்டும் என அதிகமாக நினைப்பாராம் ஸ்ரீகாந்த். அதுக்காக என்னெல்லாம் செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் செய்வாராம். அடுத்ததாக இவரை மிகவும் கவர்ந்தவர் ஆக அஜித் இருந்தாராம் .ஸ்னூக்கர் பால் விளையாடுவதற்காக இரவு நேரத்தில் அஜித் வெறும் பனியன் ஜீன்ஸ் அணிந்து வந்தாராம்.

இதையும் படிங்க: கையை தூக்கி அந்த அழகை காட்டும் சீரியல் நடிகை!.. இதுவே ரெண்டு நாளைக்கு தாங்கும்…

அவரை ரசிப்பதற்காகவே ஸ்ரீகாந்த் அங்கு போக அந்த நேரத்திலும் அஜித்தை பார்க்க ஏராளமான பெண்கள் அங்கு வந்து நின்று கொண்டிருந்தார்களாம். அதை பார்த்ததும் ஸ்ரீகாந்துக்கு இப்படியும் நாமும் வர வேண்டும். என்ன ஒரு அழகன் என அஜித்தை ரசித்திருக்கிறாராம். அதன் பிறகு ஏதோ ஒரு பட சூட்டிங். அந்த சமயத்தில் அஜித்தை பார்ப்பதற்காக ஸ்ரீகாந்த் அங்கு சென்றாராம்.

அப்போது மொட்டை வெயில் .அஜித் உடல் முழுவதும் வியர்த்துப் போய் இருந்ததாம். உடனே அஜித் தண்ணீரால் முகத்தை கழுவி விட்டு ஷாட்டுக்கு ரெடி என்று சொல்லிவிட்டாராம். அதை பார்த்ததும் ஸ்ரீகாந்துக்கு ஒரே ஷாக். என்ன ஒரு பேரழகன்? மேக்கப் எதுவும் போடாமல் வெறும் தண்ணீரால் முகம் கழுவி உடனே ஷாட் ரெடி என்று சொல்லிவிட்டாரே என மனதிலேயே நினைத்துக் கொண்டு பிரமித்து போய் நின்றாராம்.

அதன் பிறகு தான் அவருக்கு ரோஜா கூட்டம் பட வாய்ப்பு வர அங்கு ஸ்ரீகாந்தை மேக்கப் போட சொல்ல உடனே அஜித் மாதிரி மேக்கப் எல்லாம் போட மாட்டேன் என சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து முகத்தை கழுவி உடனே ஷாட்டுக்கு ரெடியாகிவிட்டாராம் ஸ்ரீகாந்த்.

இதையும் படிங்க: இளையராஜாவை மிரட்டி கல்யாணத்திற்கு வர வச்சேன்!.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!…

Next Story