இளையராஜாவை மிரட்டி கல்யாணத்திற்கு வர வச்சேன்!.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!...

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் தனது இசையால் பிரபலமானவர் இளையராஜா. மண்வாசனை மிக்க பாடல்களால பல திரைப்படங்களை ஓட வைத்தவர். 80களில் உருவான 90 சதவீத படங்களுக்கு இளையராஜாதான் இசை. இவர் இசையமைக்க சம்மதித்துவிட்டால் படம் ஹிட் என்கிற நிலையும் அப்போது இருந்தது.

படம் மொக்கையாக இருந்தாலும் இளையராஜா தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் படங்களை ஓட வைத்துவிடுவார். எனவே, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு இளையராஜாவின் இசை முக்கியமாக கருதப்பட்டது. அதோடு, புதுமுக இயக்குனர்களும் ராஜாவின் ரிக்கார்டிங் தியேட்டர் முன்பு தவம் கிடப்பார்கள்.

இதையும் படிங்க: நீ என்ன சொல்றது? நான் என்ன கேட்குறது? விஜய் சேதுபதியின் ஆசைக்கு குறுக்கே நிற்கும் மகன்

இளையராஜா மிகவும் வேகமாக இசையமைப்பார். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று படங்களுக்கெல்லாம் இசையமைப்பார். 2 மணி நேரத்தில் ஒரு முழு படத்திற்கான 5 பாடல்களை போட்டு கொடுத்துவிடுவார். கமலின் நடிப்பில் இப்போதும் பேசப்படும் குணா படத்திற்கு 5 பாடல்களுக்கான மெட்டை போட ராஜா எடுத்துக்கொண்டது 2 மணி நேரம்தான்.

தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து கொண்டே இருப்பதால் அவரால் சினிமா தொடர்பான விழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சியிலும் கூட கலந்துகொள்ள முடியாது. ஆனால், அவரை ஒருவர் தனது திருமணத்திற்கு வர வைத்திருந்தார். அப்போது அது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அவர்தான் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா. பாட்டுக்கு ஒரு தலைவன், சாமி போட்ட முடிச்சி, தெய்வ வாக்கு, சின்ன மாப்ளே, நந்தவனத்தேரு, ராசைய்யா, சரோஜா, மரியாதை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் இவர்.

siva

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அவர் பேசியபோது ‘சின்ன மாப்ளே படம் உருவாகி கொண்டிருந்தபோது எனக்கு திருமணம் முடிவானது. இளையராஜாவிடம் சென்று ‘விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர், நீங்கள் மூவரும் என் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. நீங்கள் வரவேண்டும்’ என்றேன். அவரோ ‘எப்படியா முடியும். ஒரு நாளைக்கு 2 படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்’ என சொன்னார்.

‘நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்’ என்றேன். ‘என்னய்யா மிரட்டுறா. கண்டிப்பா வரணுமா?’ எனகேட்டார். ‘ஆமாம்’ என்றேன். தேதியை கேட்டார். சொன்னபடி வந்தார். அன்று ஒருநாள் பிரசாத் ஸ்டுடியோவில் அவர் இல்லை. அப்படி நடந்ததே இல்லை. கோலிவுட்டே இதை ஆச்சர்யமாக பேசியது. எனக்காக கோபிச்செட்டிபாளையம் வந்து வாழ்த்திவிட்டு போனார்’ என சிவா கூறியிருந்தார்.

 

Related Articles

Next Story