எப்படி இருந்த மனுஷன்? ‘கிழக்கே போகும் ரயில்’ ஹீரோவா இது? தள்ளாடும் நிலையில் இப்படி ஆயிட்டாரே
Actor Sudhakar:பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் கிழக்கே போகும் ரயில். இந்த படத்தின் மூலமாகத்தான் ராதிகாவை இந்த சினிமா முதன்முதலாக அடையாளம் கண்டு கொண்டது. முதல் படத்திலேயே ராதிகாவின் திறமையை இந்த உலகிற்கு காட்டினார் பாரதிராஜா. அந்த அளவுக்கு ராதிகாவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தில் ராதிகாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் சுதாகர். இவர் ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழில் கிட்டத்தட்ட 600 படங்களில் நடித்தவர்.
இதையும் படிங்க: தெலுங்கு நடிகர்களை கிண்டல் பண்ணும் விதமாக கமல் செஞ்ச ஒரு காரியம்! ஜனகராஜ் சொன்ன ரகசியம்
1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ராதிகாவுடன் ஜோடியாக நடித்த சுதாகர் அந்த படத்திற்கு பிறகு ராதிகாவுடன் இணைந்து கிட்டத்தட்ட 11 படங்களில் இணைந்து நடித்து அதிலிருந்து ராதிகாவும் சுதாகரும் வெற்றி ஜோடியாக இந்த தமிழ் திரை உலகில் பயணித்தனர்.
அதுவும் சுதாகர் நடிப்பிலேயே வெளியான திரைப்படங்களில் 100 நாட்களைக் கடந்து ஓடிய திரைப்படமாக இந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படம் அமைந்தது. இப்படி பல படங்களில் நடித்த சுதாகர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. ஆனால் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: மரியாதை கொடுக்காத சரோஜாதேவி!.. ஆனாலும் வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்ட எம்..ஜி.ஆர்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தோன்றிய சுதாகர் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் மிகவும் தள்ளாடும் நிலைமையில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். அதை பார்த்த அனைவரும் எப்படிப்பட்ட மனுஷன் இந்த நிலைமைக்கு போய்விட்டாரே என ஆச்சரியப்பட்டனர்.
அது சம்பந்தமான புகைப்படம் தான் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இருந்தாலும் அவருடன் பயணித்த பல நடிகர்கள் இன்னும் இளமையாகவும் உத்வேகத்துடன் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் ஒரு காதல் இளவரசனாக இருந்த சுதாகரா இது என்று அந்த புகைப்படத்தை பார்க்கும் போது நமக்கு தோன்றுகிறது .
இதையும் படிங்க: ரஜினி நாலாயிரம் மட்டும் சம்பளமா வாங்கி நடிச்சது இந்த படம்தான்! என்ன கேரக்டர்னு தெரியுமா?..