முன்னாள் நடிகர் மற்றும் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். அப்பாவை போல ஜேசனும் நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்க ஜேசன் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிக்மா என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 2ம் தேதியான நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது..
கடந்த சில மாதங்களாகவே சிக்மா படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டார். பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்தார். ஜேசனின் நிதானமான பேச்சும், பக்குவமும் பலரிடமும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், நாளை சிக்மா திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் நடிகை சூர்யாவும், அவரின் மனைவி ஜோதிகாவும் ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்..
சூர்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘குட்டி சஞ்சய் இப்போது இயக்குனராகிவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை.. நாளை மிகப்பெரிய நாள் என்பதால் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. சந்தீப் கிஷன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.
ஜோதியாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘ஜேசன் சஞ்சய் மற்றும் சிக்மா படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். படத்தின் புரமோஷனை பார்த்து வருகிறேன்.. மிகவும் பக்குவமான, அமைதியான மற்றும் இயல்பான இளைஞராக நீங்கள் வளர்ந்திருப்பதை பார்க்கும்போது உங்களுக்கு கிடைக்கும் வெற்றிக்கு நிச்சயம் நீங்கள் முழு தகுதியானவர் என நம்புகிறேன்.
உங்கள் பெற்றோருக்கு சிறந்த மகனாக இருக்கும் உங்களையும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். சிக்மா திரைப்படத்தின் ரிலீஸ் சிறப்பாக அமையட்டும்.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என தெரிவித்திருக்கிறார்.




