‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் தான் ‘ஜெயிலர் 2’.
இதில் சூரஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால், ஷிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடல்கள் ஆல்ரெடி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்த வண்ணமுள்ளது.
படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இதை ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வந்திருக்கிறது.




