கோலிவுட்டில் மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கைவசம் ‘சேயோன்’ மற்றும் ‘SK27’ என ரெண்டு படங்கள் மட்டுமே வைத்திருக்கிறார்.
இதில் ‘SK27’ படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோயின் ஆக கயாடு லோஹர் நடிக்கிறார்.
‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். சமீபத்தில், இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது, இந்த ஷெட்யூலில் பாடல் காட்சியை படமாக்கி வருவதாகவும், இது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் பொல்லாதவன்’ பாடலின் ரீமிக்ஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.




