பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய குமரன்!.. போட்டியாளர்கள் சோகம்!..

தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நேற்றைய எபிசோட்டில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மூன்று பேர் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.

அதாவது சக போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்ட லட்சுமி பிரியா, ஜாவித், சவின்யா ஆகிய மூன்றும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அவர்களுக்கு சில டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டது…

இந்நிலையில்தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல்முறையாக அறிமுகமான சின்னத்திரை நடிகர் குமரன் ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியாளர்களின் வேண்டுகோளையும் மீறி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

இதன் மூலம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் குமரனின் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. அவரின் எதிர்பாராத முடிவு வீட்டில் இருந்த போட்டியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குமரனின் பிரிவு உணர்ச்சிகரமான தருணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.