தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், கேமியோ வேடங்களிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது
.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 படத்திலும் விஜய் சேதுபதி கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருபக்கம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். பீனிக்ஸ் என்கிற திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் பெரிய வெற்றியை தரவில்லை..
ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு வெளியான அயன் மேன் தமிழ் வெர்சனில் படத்தின் ஹீரோ ராபர்ட் டௌனிக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். ஆனால், அது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, சமூகவலைத்தளங்கலில் பலரும் அதை ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில்தான், எக்ஸ் தளத்தில் ஒரு ரசிகர் ‘தலைவா அயன் மேன் படத்துக்கு வாய்ஸ் மட்டும் வேணாம்’ என்று பதிவிட்டு சூர்யா விஜய் சேதுபதி ஐடியை டேக்ஸ் செய்திருந்தார். அதற்கு ‘Dont worry.. I will take care thala’ என்று சூர்யா ரிப்ளை செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான அயன் மேன் திரைப்படத்திலும் படத்தின் ஹீரோவுக்கு விஜய் சேதுபதியே குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.