நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போலவே நடிகராகவர் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் அவரோ இயக்குனராக மாறியிருக்கிறார்.
லைக்கா தயாரிப்பில் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து சிக்மா திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கிறார்.

இந்த படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. விஜயின் மகன் ஜேசன் இயக்கியிருப்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சிக்மா புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஜேசன் கலந்து கொண்டு பேசி வருகிறார். பல ஊடகங்களுக்கும் பேட்டியும் கொடுத்தார்..

அப்போது தனது அப்பா விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் நிலையில் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பொறுப்பு இருப்பதாகவும் அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன் எனவும் ஜேசன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சிக்மா திரைப்படத்தின் Pre Release Event நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் படத்தில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு வைரல் தொற்று ஏற்பட்டிருப்பதால் நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை என தயாரிப்பாளர் ஜி.கே தமிழ் குமரன் தெரிவித்துள்ளார்.