சினிமாவில் பெரிய நடிகர்கள் எப்போதும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பார்கள். தான் நடிக்கும் படத்தில் மற்ற சில நடிகர்கள் நடித்திருந்தாலும் அதில் ஹீரோ என்கிற இமேஜ் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என நினைப்பார்கள். அதாவது அது தன்னுடைய படமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
விஜய், அஜித், கமல், ரஜினி, தனுஷ், சிம்பு, சூர்யா, விஷால் என எல்லா நடிகர்களுக்கும் இது பொருந்தும். ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க ஆசைப்பட்டார் நெல்சன். சிவகார்த்திகேயனும் ஆவலாக இருந்தார். ஆனால், ‘இது என்னுடைய படமாக இருக்கவேண்டும். இதில், அவர் வேண்டாம்’ என தெளிவாக சொன்னார் ரஜினி.
இதையும் படிங்க: எனக்கும் தற்கொலை எண்ணம் வந்துச்சு… ஆனா? நடந்த ட்விஸ்ட்… ஷாக்கிங் நியூஸ் சொன்ன கமல்ஹாசன்!
இப்படி பல நடிகர்களும் தாங்கள் நடிக்கும் படங்களில் மற்ற நடிகர்கள் நடிப்பதை விரும்ப மாட்டார்கள். தற்போது கமல் கூட தன்னை மாற்றிகொண்டார். அதனால்தான் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் நடித்தனர். துவக்கத்தில் விமல் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் இப்போது அதேபோல் சிவகார்த்திகேயனே நடிக்க மாட்டார். ஏனெனில் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இருந்தது. அந்த படம் பார்த்தவர்கள் விஜய் சேதுபதிதான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்றே சொன்னார்கள். இது விஜய்க்கும் கோபத்தை ஏற்படுத்தியதாக அப்போது செய்திகள் வெளியானது. இப்போது அவர் நடித்துவரும் லியோ படத்தில் பல நடிகர்கள் இருந்தாலும் ஹீரோ என்னவோ விஜய் மட்டும்தான். இந்த படத்தில் லோகேஷிடம் அவர் தெளிவாக சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க: கேப் விடாம அடிச்சா எப்புடி… வாயவே திறக்கவிட கூடாது… வெங்கட் பிரபுவை லாக் செய்த தளபதி!
சூர்யாவும் விஜயும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ஃபிரண்ட்ஸ். 2001ம் வருடம் வெளியான இந்த படத்தில்தான் வடிவேலுவின் நேசமணி காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த படத்தில் விஜயின் தங்கை விஜயலட்சுமியை சூர்யா காதலிப்பது போல் காட்சிகள் வரும். எனவே, இவருக்கும் நிறைய காட்சிகளை இயக்குனர் எடுத்துள்ளார். ஆனால், அதில் பல காட்சிகளை விஜய் தரப்பு வெட்ட சொல்லிவிட்டதாம். இதில், சூர்யாவும் அப்செட் ஆனார்.
ஆனால், விஜய் அவரின் நண்பர். அதோடு, தன்னை விட பெரிய ஹீரோ. எனவே, கோபத்தை காட்ட முடியாமல் விட்டுவிட்டாராம். இப்போது அதே சூர்யா ஹீரோவாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்ததோடு, ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்த படமாவது ஹிட் அடிக்குமா?.. மேடையில் கண் கலங்கிய சித்தார்த்!.. என்ன சொன்னார் தெரியுமா?,,
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…