பொண்டாட்டிக்காக மும்பை போன சூர்யா… கோலிவுட் இயக்குனர்களை தொடர்ந்து இம்சிக்கிறாரே!...
Actor suriya: நடிகர் சூர்யா தன்னுடைய வெற்றி பாதையில் இருந்த சமயத்தில் மும்பை பக்கம் சென்று இன்று கோலிவுட்டில் முகவரியை தொலைக்கும் நிலைக்கு வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் தொடர்ந்து வெற்றி படங்கள் வெளியாகி வந்தது. சூரரைப் போற்று, ஜெய்பீம் என மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த சூர்யா, திடீரென தனது குடும்பத்துடன் மும்பையில் சென்று செட்டில் ஆகுவதாக அறிவித்தார். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. குழந்தைகளின் படிப்பு ஒரு பக்கம் பேசப்பட்டாலும், சிவகுமார் மற்றும் ஜோதிகா இடையே பிரச்சனை எனவும் தகவல்கள் கசிந்தது.
ஜோதிகா தரப்போ என்னுடைய பெற்றோர்கள் ரொம்பவே வயது முதிர்ந்தவர்கள் அவர்களுடன் நான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் சூர்யாவின் நடிப்பில் கோலிவுட்டில் 2021 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்குப் பின்னர் இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை.
கங்குவா திரைப்படம் மட்டும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆனால் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட வணங்கான் முதலில் கைநழுவி போனது. இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அவர் சில பயிற்சிகளையும் மேற்கொண்டார்.
ஆனால் தற்போது அப்படத்தின் படப்பிடிப்புகளும் பல வருடங்களாக தள்ளிப் போய்க் கொண்டு வருகிறது. தற்போது விடுதலை படத்தின் இறுதிக்கட்டத்தை வெற்றிமாறன் நெருங்கி விட்டதால் சூர்யா இல்லாமல் தான் வாடிவாசல் தயாராகும் என்ற நிலை தற்போது உருவாகி இருக்கிறது. அதே வேளையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்தது புறநானூறு திரைப்படம்.
இப்படத்தின் அறிவிப்பு பிரம்மாண்டமாக வெளியான நிலையில் தற்போது இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 60களில் நடக்கும் கதை என்பதால் சூர்யா இதற்கு பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் ரசிகர்களை பெரிய ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
தொடர்ச்சியாக நல்ல படங்களை சூர்யா கைநழுவ விடுவது அவர் கோலிவுட்டில் தனக்கு இருக்கும் இடத்தை இழக்கப் போகிறார் என்ற பேச்சுகள் எழுந்து வருகிறது. தற்போதைய நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 தவற தமிழில் சூர்யாவிற்கு எந்த படமும் கையில் இல்லை என்பது அதிர்ச்சி தகவலாக வெளியாகி இருக்கிறது.